நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாகவே எங்கே இருக்கிறார்.? என்ன செய்து கொண்டிருக்கிறார்.? என்ற எந்த தகவலுமே அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாமல், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென விஷால் நடித்த மதகஜ ராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசாலை பார்த்த பலருக்கும் அப்போதுதான் தெரியவந்தது,
விஷாலை இத்தனை நாளாக ஏன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது என்கின்ற காரணம் புரிய வந்தது. விஷால் உடல்நிலை சரியில்லாமல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், யாரையும் சந்திக்க விரும்பாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவருடன் இருந்த நண்பர்களில் நந்தா, ரமணா இருவரும் அவருக்கு செய்த மிகப்பெரிய துரோகம் தான், விஷால் யாரை இந்த உலகில் நம்புவது என்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு அறையிலே முடங்கியதாக கூறப்படுகிறது.
விஷாலின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் அந்த இரண்டு நண்பர்கள் தான் பார்த்து வந்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில் மிகப்பெரிய மோசடி செய்து விஷாலை கடனாளியாக ஆக்கிவிட்டது மட்டுமல்லாமல் விசாலுக்கு சேர வேண்டிய பணத்தை பொய் கணக்கு காண்பித்து மொத்தமாக சுருட்டி கொண்டு விஷாலை முதுகில் குத்தி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தின் நடித்த பொழுது அவர் கண் மாறு கண் போன்று வருவதற்காக கண்ணை இழுத்து ஒரு பக்கம் தைக்கப்பட்டு சிகிச்சை அளித்ததின் காரணமாக அவருக்கு அடிக்கடி உடல் ரீதியாக சிறு சிறு பிரச்சனைகள் விஷாலுக்கு இருந்து வந்த நிலையில், தான் முழுமையாக நம்பிய இரண்டு நண்பர்கள் இழைத்த துரோகம் மேலும் விசாலை கடுமையான மழை உலைச்சலுக்கு ஆளாக்கி உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் முற்றிலும் இந்த உலகையே வெறுத்த விஷால் வீட்டிற்குள்ளே முடங்கினார். தன்னுடைய உதவியாளரிடம் யாராவது என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னால், நான் வீட்டிலேயே இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார், மூன்று நாட்கள் தூங்காமலே இருக்கும் விஷால், திடீரென்று தூங்கினால் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ந்து தூங்குவாராம்,
இப்படி எல்லாம் விசித்திரமான சில நோய்கள் விஷாலுக்கு இருந்திருக்கிறது, இந்தநிலையில் விஷால் உடல்நிலை இப்படி சரியில்லாமல் போனதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான் என்று மிகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வரும் இந்த சூழலில், விஷாலின் இந்த நிலையை பார்த்து பாலாவே வருத்தப்பட்டதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பாலாவை சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் சந்தித்து பேசி இருக்கிறார் அப்போது பாலா, நான் அந்த தவறை செய்திருக்கக் கூடாது, அவன் இவன் படத்தின் போது விஷால் கண் மார் கண் போன்று வருவதற்கு செய்த அறுவை சிகிச்சை தான், விஷால் உடல்நலம் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என தெரிவித்த பாலா, அந்த வகையில் விஷாலின் உடல்நிலை மோசமாக நானும் காரணமாக இருந்து விட்டேனே, இந்த பாவத்தை நான் எங்கே தொலைக்கப் போகிறேன் என்று கண் கலங்கி பாலா வேதனை பட்டதாக கூறப்படுகிறது.