சமீபத்தில் நடந்த மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வாய் உளறல், கை நடுக்கம், ரொம்ப நேரம் அவரால் நின்று பேச முடியும் இல்லை, நடக்க முடியவில்லை, அதன் பின்பு அவருக்கு சோபா போட்டு அமர வைத்த நிகழ்வுகள் எல்லாம் பார்க்கும் பொழுது, விஷாலுக்கு எந்த மாதிரியான நோய் பாதிப்பு என அவருடைய நடவடிக்கைகள் ஆள் ஏற்படும் சிம்டம்ஸ் வைத்து மருத்துவர்கள் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்கள்.
அதாவது தொகுப்பாளினி டிடி சொன்னது போன்று, விஷாலுக்கு கடுமையான காய்ச்சல் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள். கடுமையான காய்ச்சல் இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் கை நடுக்கம், வாய் உலறல், மேலும் விஷாலின் பார்வையே மிகவும் மங்களாக இருந்ததை கவனிக்க முடிந்தது.
இந்த சிம்டம்ஸ் எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, அவருக்கு சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய, மூளை மற்றும் நரம்பியல் தொல்லையால் தான் இது போன்ற சிம்டர்ஸ்கள் வெளிப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். மூளை மற்றும் நரம்பியல் தொந்தரவு காரணமாக மூளைக்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படலாம், அல்லது ரத்த கசிவு ஏற்பட்டிருந்தால் இதுபோன்ற வாய்க்கொளரல்கள், கை, கால் நடுக்கம் போன்ற சிம்டம்சுகள் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதே நேரத்தில் மூளையில் செல்லக்கூடிய நரம்புகளில் ஸ்ட்ரோக் வருவதற்கு தகாத பழக்கம் மட்டும் அல்ல, அதிக ஸ்ட்ரெஸ் இருந்தாலும் இது போன்ற மூலையில் ஸ்ட்ரோக் பாதிப்புகள் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் விஷாலுக்கு கை, கால் நடுக்கம், வாய் உளறல் போன்ற சிம்டம்ஸ்களை பார்க்கும் பொழுது ஒன்று நரம்பியல் பாதிப்பு இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கு என தெரிவிக்கும் மருத்துவர்கள்.
அந்த நரம்பியல் பாதிப்பில் எந்த நோய்கள் விஷாலுக்கு இருக்கு என்பதை கண்டறிய வேண்டும், அதில் ஸ்ட்ரோக் அல்லது தலையில் அடிபட்டிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் பார்க்கின் சென்ஸ் மாதிரியான நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கு என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பார்க்கின்சன்ஸ் பொதுவாகவே வயதானவர்களுக்கு தான் வரும், என்பதால் இது விஷாலுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
அந்த வகையில் நிச்சயம் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பியலில் ஏதாவது பாதிப்பு விஷாலுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் தன்னுடைய ரசிகர்கள் கவலைப்பட கூடாது என்பதற்காக உடல் சரியில்லை என்று சொல்லி இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண உடல் காய்ச்சலுக்காக அவருடைய கை நடுக்கம், வாய்க்குளரல் உடம்பில் இவ்வளவு பெரிய மாற்றம் என்பது சாத்தியம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு காரணம் மனிதனின் வாழ்க்கை முறை தான் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள், அதிக ஸ்ட்ரெஸ் இருக்க கூடாது, சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும், பிபி மற்றும் சுகரை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும், மேலும் மது குடித்தல் புதுகை பழக்கம் இருக்கக் கூடாது. அப்படி இது போன்ற பழக்க வழக்கம் இருந்தால் மட்டுமே விஷாலுக்கு ஏற்பட்ட இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.