நடிகர் தனது “விஷால் பிலிம் பாக்டரி”யின் மூலம் பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சண்டக்கோழி 2 படம் தான் ரசிகர்களிடையே நலல் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடித்த அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மூலம் ஒரு கம் பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் விஷால் சினிமாவில் பல்வேறு சில்மிஷங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாயை விஷால் கடனாக பெற்றிருந்தார். மேலும், இந்த தொகையை லைகா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு செலுத்தி இருந்தது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷால் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்து.
அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாக நான் திருப்பி செலுத்தும் வரை என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் அனைத்து படங்களில் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று விஷால் உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனால், விஷால் சொன்னபடி கடன் தொகையை திருப்பி தரவில்லை. இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் பாலுவிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு கடைசி வரை படமே நடித்துக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அந்த மனிதன் இறந்தும் போய்விட்டார்.
அவரின் இறப்பிற்கு சென்ற விஷால் ஒரு படத்தில் நடித்து அந்த லாபத்தை இந்த குடும்பத்திற்கு கொடுப்பேன் என்றும் கூறினார். ஆனால் அதையும் செய்யவில்லை. இதேபோன்று பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கி விட்டு படத்திற்கு கால்ஷீட் எதுவும் கொடுக்காமல் பணத்தை சுருட்டி கொண்டுள்ளார். இவரின் உருட்டுகள் தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகாவிலும் உள்ளது.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் (46). கடந்த 2021 ஆண்டில் 29-ம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும் போது 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களை படிக்க வைத்தார்.
இந்நிலையில் அவரின் இறப்பிற்கு சென்ற நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரால் கல்வி உதவிப்பெற்று வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை தானே ஏற்பதாக கூறினார். கூறியது மட்டும்தான் அதற்குப் பிறகு ஒன்றும் செய்யவில்லை. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
இந்நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு அளித்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக் பஸ்டர் என்ற வார்த்தை கேட்கும் போதும் அனைவரும் பாராட்டும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த காசிற்கு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றரை வருட உழைப்பிற்கு பலன் கிடைத்தது போல இருக்கு. நான் முன்பே கூறியிருந்தது போல என் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார். சொல்வதெல்லாம் சரி ஆனால் இதெல்லாம் விஷால் செய்வாரா என்ற கேள்வி தற்போது எழும்பியுள்ளது. அது மட்டும் இல்லை மார்க் ஆண்டனி படத்திற்கு தயாரிப்பாளர் வேறு யாரோ. ஏதோ விஷால் தான் தயாரிப்பாளர் என்ற அளவிற்கு வாய்க்கு வந்ததை கூறிவிட்டு மறுநாளே மறந்து விடுகிறார். இதனால் ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.