நன்றாக இருந்த சினிமாவை நாசம் செய்தது விஷால் தான் என்கிற கடும் விமர்சனம் நடிகர் விஷால் மீது சினிமா துறையினர் மத்தியில் உண்டு. நடிகர் சங்கம் தலைவராக இருந்த சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த ராதாரவி உடன் தொடங்கிய மோதலில் இருந்து தற்பொழுது வரை பரபரப்பாக எதையாவது செய்து பப்ளிசிட்டி செய்து வருகின்றவர் நடிகர் விஷால், ஆனால் ஆரம்பத்தில் இவருடன் இருந்த பலர் விஷால் ஒரு டுபாக்கூர் என தெரிந்து அவரிடம் இருந்து விலகி சென்றுவிட்டனர்.
ஆரம்பத்தில் நடிகர் சரத்குமார் எதிராக விஷால் அணி போட்டியிட்ட போது, இந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் அடுத்த சில மாதங்களில் மலேசியாவில் நடந்த சினிமா கலைநிகழ்ச்சிகளில் நடிகர் விஷால் முறைகேடு செய்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்து, விஷால் முகத்திரையை பொதுவெளியில் கிழித்து, விஷால் ஒரு டுபாக்கூர் என அம்பலப்டுத்தினார் மறைந்த நடிகர் ஜெ.கே.ரித்தீஷ்.
அதே போன்று தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த வாய்ப்பு தொகையை அனாவசியமாக செலவு செய்துவிட்டதாக தயாரிப்பாளர் கே. ராஜன் தொடர்ந்து மேலும் இது போன்று பல்வேறு குற்றசாட்டுகளை நடிகர் விஷால் மீது தெரிவித்து வருகிறார். விஷாலை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நடிகை வரலக்ஷ்மி தனது காதலை முறித்து கொண்டு விஷாலை விட்டு பிரிந்தார். இதன் பின்பு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் மகளுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.
ஆனால் அந்த நிச்சயதார்த்தம் பாதியிலே நின்றது, இதற்கு காரணம் விஷால் ஒரு டுபாக்கூர் என்று பெண் வீட்டாருக்கு சென்ற தகவல் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சொந்தமாக படம் தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை சந்தித்த விஷால், கடன் வாங்கியவர்களிடம் நாணயமாக நடந்து கொள்வதில்லை, ஒரு சில படங்களில் அட்வான்ஸ் வாங்கி கொண்டு அந்த தயாரிப்பாளர் படத்தில் நடிக்க முன் வருவதில்லை என விஷாலின் பெயர் பஞ்சராகி உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது விஷால் நடித்து வரும் படம் லத்தி, இந்த படத்தில் காவல்த்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் லத்தி படத்தின் பப்ளிசிட்டிக்காக பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார் விஷால், அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் சண்டை கட்சியின் போது, தனது காலில் வலி ஏற்பட்டு சுருண்டு விழுவது போன்ற ஒரு வீடியோ வெளியானது.
இதனை தொடர்ந்து லத்தி படப்பிடிப்பு தளத்தில் பசியால் இருக்கும் ஒரு நாய்க்கு விஷால் உணவு அளிப்பது போன்ற ஒரு வீடியோவை எடுத்து தன்னை ஒரு இறக்கமுள்ள மனிதனாக காட்டி கொள்வதற்காக விஷால் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் லத்தி படத்தில் நடித்த ஊழியர்களுக்கு சுமார் 9 நாட்கள் சம்பளம் பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் பல்வேறு முயற்சி எடுத்தும் சம்பளம் தருவதாக இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊழியர்களுக்கு உழைத்த சம்பளத்தை கொடுக்க மனமில்லாதவர்கள் நாய் பசியை போக்குகிறோம் என பத்து ரூபாய் ரொட்டியை வாங்கி கொடுத்து விளம்பரம் தேடி வருவதாக, நடிகர் விஷால் குறித்து கடுமையான விமர்சனம் சினிமா துறையில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.