உதயநிதி பெயரை பயன்படுத்தி நடிகர் விஷால் செய்த தில்லுமுல்லு… சென்னை வெள்ளத்தில் விஷால் கொந்தளித்ததின் பின்னணி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருந்து வர கூடியவர்கள், இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு பற்றி பலமுறை விஷால் பேசியுள்ளார், கடந்த ஆண்டு விஷால் நடித்த லத்தி படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது பேசிய விஷால், நாங்கள் பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்கள்.

ஸ்டாலின அங்கிள் ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அந்தப் பிரச்சார வண்டிக்கு உள்ளே அமர்ந்து கொண்டு நானும் மற்றும் ஒரு நண்பர் அன்பில் மகேஷ் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்வோம். ஆனால் அப்போது உண்மையில் உதயநிதிக்கு அரசியல் வருவதற்கான ஆர்வம் இல்லை.

மேலும், என்னுடைய ஆசை புதியதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா பெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும் இடம் பெற வேண்டும். இது உதயநிதி என்னுடைய நண்பன் என்பதற்காக அல்ல, ஒரு வரலாற்று சிறப்புமிக்க அந்தக் கட்டிடம் வரக்கூடிய காலகட்டத்தில். வரலாற்று சிறப்புமிக்க பெயர் அந்த கட்டிடத்தில் பதிவாக வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என விஷால் பேசியிருந்தார்.

இப்படி உதயநிதி ஸ்டாலினை புகழந்த விஷால், தற்பொழுது சென்னை வெள்ளத்தில் போது ,மழைநீர் சேமிப்பு வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய விஷால்,இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்” என திமுக அரசை கடுமையாக சாடி இருந்தார் விஷால் ,

என்னடா, அமைச்சர் உதயநிதி நண்பரான விஷாலே திமுக அரசை இப்படி கடுமையாக விமர்சனம் செய்வதா.? என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், திமுக அரசை இப்படி விமர்சனம் செய்துள்ள விஷாலுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் அப்படி என்ன பிரட்சனை நடந்துள்து என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல் வெளியாகியுள்ளது. விஷால் மீது சினிமா துறையில் ஏகப்பட்ட முறைகேடு குற்றசாட்டுகள் உண்டு.

பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு, அவர்களுக்கு இது வரை கால் சீட் கொடுப்பதில்லை, மேலும் வாங்கிய கடனை திருப்பி தருவதில்லை என விஷால் மீது ஏகப்பட்ட குற்றசாட்டு உள்ளது. விஷால் பொதுவாக இதுபோன்று பல போர்ஜரி வேலைகளை செய்து விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுத்தால், அவர்களிடம் எனது நண்பர் உதயநிதி தெரியுமா.? என்று உதயநிதி பேரை தவறாக பயன்படுத்தி வருகிறார் விஷால் என்கின்ற குற்றச்சாட்டும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் விஷாலால் பாதிக்கப்பட்டவர்கள் ப்ரோடுயூசர் கவுன்சில் விஷால் மீது கொடுக்கப்பட்ட புகாரை நேரடியா உதயநிதியிடம் எடுத்துச் சென்றுள்ளார்கள். விஷால் தொடர்ந்து இது போன்ற பல பிரச்சனைகளை செய்து வருகிறார், அவரால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் விஷாலுக்கு நெருக்கடி கொடுத்தால், உங்கள் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார் விஷால் என்று உதயநிதி கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து உதயநிதி தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட சினிமா துறையினருக்கு ஒரு தகவல் சென்றுள்ளது, விஷால் விவகாரத்தில் நியாப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க, உதயநிதி எதிலும் தலையிட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் விஷாலுக்கு இனிமேல் உதயநிதி பெயரை எங்கயும் தவறாக பயன்படுத்த கூடாது என உதயநிதி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பே விஷால் திமுகவை சீண்டும் வகையில் பிரதமர் மோடியை புகழ்வது, சென்னை வெள்ளத்தில் திமுக அரசுக்கு எதிராக பேசி வருவதற்கு பின்னணி காரணம் என கூறப்படுகிறது.