நடிகர் விஷால் சமீபத்தில் நடந்த மத கஜ ராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், 47 வயது விஷால் 70 வயது முதியவர் போல் காணப்பட்டு, கை நடுக்கம், வாய் குளறல், அவரால் நின்று கூட பேச முடியாத அளவிற்கு உடல்நிலை படும் மோசமாக காணப்பட்டார்.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷாலை நடிகை குஷ்பூ சந்தித்தபோது, இருவரும் ஆற தழுவி கட்டிப்பிடித்து, குஷ்பூ நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார் விஷால், இந்த சம்பவம் குஷ்புவுக்கும் விஷாலுக்கும் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டது. அந்த வகையில் இந்த அளவுக்கு குஷ்புவுக்கும் விஷாலுக்கும் இவ்வளவு நெருக்கமான உறவு இருப்பது குறித்து, பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வரும் சூழலில்.
குஷ்பூக்கும் விஷாலுக்கும் இடையில் எந்த மாதிரியான உறவு என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மத கஜ ராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொள்ளலாமே இருந்திருக்கலாம், இதில் அவர் கலந்து கொண்டதால் அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
காரணம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கம்பீரமாக விஷாலை பார்த்த மக்கள், இப்படி விஷால் உடல்நிலை மோசமாக கை கால் நடுக்கத்துடன் பார்த்தது, நிச்சயம் விஷால் உடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வரவழைத்தது நடிகை குஷ்பு தான் என்றும் கூறப்படுகிறது.
காரணம் சமீப காலமாகவே விஷால் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார், மேலும் அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலே முடங்கி விட்டார். அவருடன் இருந்த நண்பர்கள் பலரும் அவரை விட்டு வெளியேறிய நிலையில், விஷால் எப்படி இருக்கிறார் என்கின்ற முறையான தகவல்கள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.
காரணம் விஷாலை பெரும்பாலும் சினிமா துறையினர் யாருமே தொடர்பு கொள்ள முடியவில்லை. சமீபத்தில் பாலா சினிமா துறைக்கு வந்து 25 ஆண்டு நிகழ்ச்சிக்கு கூட விசா கலந்து கொள்ளாததற்கு காரணம், விஷால் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அழைப்பு கூட அவர்களால் விடுமுவிக்க முடியவில்லை.
இந்த நிலையில் வீட்டிலேயே தன்னுடைய உடல்நிலை கருத்தில் கொண்டு முடங்கியிருந்த விஷாலை நேரில் சென்று சந்தித்த குஷ்பு, நீ முதலில் வீட்டை விட்டு வெளியே வா, வீட்டுக்குள்ளே முடங்கி இருக்க வேண்டாம், உன்னை நான் பழைய விஷாலாக மாற்றி காண்பிக்கிறேன், என்று மதகஜராஜா நிகழ்ச்சிக்கு குஷ்பூ கட்டாயப்படுத்தி விஷாலை வரவழைத்தவர்.
தற்பொழுது தொடர்ந்து விஷாலை ஒரு தாய் போல, சொந்த சகோதரியாக கேர் எடுத்து பார்த்து வருகிறாராம் குஷ்பூ, பொதுவாக விஷால் அவருடைய தாய் தந்தை சொல்லை கூட சிலவற்றை கேட்பார், கேட்காமல் இருப்பார். ஆனால் தன் மீது எப்போதுமே அக்கறையாக இருக்கக்கூடிய அக்கா குஷ்பு அவர்களின் பேச்சை தட்டாமல் கேட்டு விடுவாராம் விஷால்.
அந்த வகையில் குஷ்பூ தற்பொழுது விஷாலை ரொம்ப கேர் எடுத்து பார்த்து வருவது விஷாலின் பெற்றோர் மகிழ்ச்சியை ஆறுதலையும் கொடுத்து வரும் நிலையில், குஷ்புவை கையெடுத்து கும்பிட்டு விஷாலின் பெற்றோர் நன்றியும் தெரிவித்ததாக கூறப்படுகிறது