ஹீரோயினாகும் விக்ரமின் ‘மகள்’… அட அந்த பொண்ணா இது .. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

0
Follow on Google News

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் சாரா. அப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா நடிப்பில் அனைவரின் நெஞ்சையும் உலுக்கினார். தொடர்ந்து அவரை பேபி சாரா என்று மக்கள் அழைத்தனர். இன்று அளவிலும் பேபி சாரா என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது தெய்வத்திருமகள் படம் தான்.

அந்தப் படத்திற்குப் பிறகு அவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் சைவம், விழித்திரு, சித்திரையில் நிலாச்சோறு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாரா அர்ஜுன். இந்தப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தார் சாரா அர்ஜுன்.

இந்தப்படத்தில் சிறு வயது ஐஸ்வர்யா ராயாக, நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சாரா. ‘தெய்வ திருமள்’ படத்தில் பார்த்த குழந்தை நட்சத்திரமா இவர் என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்து பிரம்மிக்க வைத்திருந்தார். அதன் பின் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் பேபி சாரா புகைப்பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தைப் பார்த்த பலர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். பலர் சர்ச்சைகளையும் கிளப்பினர். இந்த படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், விவேக் கண்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது, பேபி சாரா ஹீரோயின் சாராவாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதற்கேற்றவாறு, இயக்குனர் ஏ.எல். விஜய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘குழந்தை நட்சத்திரங்களை சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் சுலபம். அவர்கள் மூளை மிக கூர்மையாக இருக்கும். நாம் சொல்வதை அப்படியே புரிந்து கொண்டு இயல்பாக நடிப்பார்கள். குறிப்பாக சாரா நாம் சொல்வதை சட்டென புரிந்து கொள்வார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சாராவை தெய்வீக அழகுடன் இயக்குனர் மணிரத்னம் காண்பித்து விட்டார். இனி சாரா ஹீரோயினாக நடிக்கலாம். அவரை 2025 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளேன் என கூறியுள்ளார்.