நீங்க தான் சிவா என்னை காப்பாற்றணும்… சிவகார்த்திகேயனிடம் சரண்டரான சியான் விக்ரம்…

0
Follow on Google News

நடிகர் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் தன் படம் வெளியாகும் நாளில் சிவகார்த்திகேயன் படம் வெளியாக கூடாது என சிவாவுக்கு கண்டிஷன் போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம், இவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகயுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் அமரன். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் அதில் பாதி ott ரிலீஸ் உரிமையிலேயே வந்துவிட்ட நிலையில் இன்னும் சாட்டிலைட் உரிமை, தமிழக ரிலீஸ் உரிமை, இந்திய ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை, பாடல்கள் உரிமை என சுமார் 200 முதல் 300 கோடி வரை பிசினஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன், இவர் மெரினா படத்தில் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சுய திறமையால் முன்னேறி டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, தற்போது திரையுலகில் வலம் வருகிறார்.

இந்நிலையில் இதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சி நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அப்போது சிவகார்த்திகேயனின் கடின உழைப்பை நடிகர் விக்ரம் பாராட்டினார். அதில் அவர் பேசுகையில், கதாநாயகன் ஆவது என்பது உங்களுடைய தலையெழுத்து. அதற்காக நீங்கள் கஷ்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை.

நீங்கள் கஷ்டப்படாமல் வரவில்லை உங்களிடம் திறமை இருக்கிறது. சினிமாவுக்கு வருவது லக் என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் திறமையும், கடின உழைப்பும் அதற்கு மிகவும் முக்கியம். இந்த இரண்டுமே உங்களிடம் இருக்கின்றன அழகும் இருக்கிறது. ஆனால் என் படம் ரிலீஸ் ஆகும்போது உங்கள் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என்றும் கூறினார். மேலும் இருவரும் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டனர்.

பண்டிகை நாட்களில் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போது தான் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். தற்போது விக்ரம், சிவகார்த்திகேயன் படத்திற்கும் இது போன்ற சிக்கல்கள் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் ஒரே நாளில் வெளியானால் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் வசூல் ரீதியாகவும் பாதிக்கப்படும்.

மேலும் விக்ரமின் தங்கலான் படமும் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் விக்ரம் சிவகார்த்திகேயனிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த போது, மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் விக்ரம் எதார்த்தமாக அளித்த பேட்டி, இன்று உண்மையிலே விக்ரம் படம் ரிலீஸ் ஆகும் தேதியில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆனால் விக்ரம் படம் வசூல் ரீதியாக பாதிக்கும் என்கிற சூழல் உருவாகியுள்ளது என்பதும் எதார்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here