எப்போதும் திரிஷா தான்… வெளிப்படையா பேசிய விஜய்…

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான நடிகர் விஜய், 1999 ஆம் ஆண்டு அவரது மனைவியான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் தனது நடிப்பு திறமையால் வளர வளர, அவரை பற்றிய பல கிசுகிசுப்புகளும் வளர்ந்து வருகிறது. அதிலும் நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்தியும் அவ்வப்போது பரவிக் கொண்டே தான் இருக்கும்.

அந்த வதந்தி போல தான், விஜய்- திரிஷா வதந்தியும்… அவர்கள் குருவி, கில்லி போன்ற படங்களில் நடித்ததில் இருந்தே இருவரும் காதலிக்கிறார்கள் என பல வதந்திகள் பரவி வந்ததும் கவனிக்கத்தக்கது. மேலும் நடிகர் விஜய் கடந்த வாரம் ஜூன் 22ஆம் தேதி, தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அப்போது திரிஷா, பிறந்தநாள் அன்று கூட்டத்தோடு கூட்டமாக வாழ்த்து தெரிவிக்காமல், தனிக்காட்டு ராஜா போல, பிறந்தால் முடிந்த மறுநாள், தானும், விஜயும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்ததோடு,

அதனுடன் சேர்த்து, ‘நீதான் என் காதல், என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல், என்ற வரிகள் அடங்கிய ஆங்கில பாடலையும் இணைத்திருந்தார்.. இந்நிலையில் தான் விஜயும், த்ரிஷாவும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என, அவர்களின் பழைய புகைப்படங்களை தோண்டி தோண்டி பார்த்த நெட்டிசன்கள், த்ரிஷாவின் பல புகைப்படங்களில் விஜய்யும் இருக்கிறார், அவரது ஷூவும் அதில் தெரிகிறது.

மேலும் த்ரிஷா சென்ற அதே Location-களுக்கு விஜயும் சென்றிருக்கிறார், விஜயின் அலுவலகம் இருக்கும் அப்பார்ட்மெண்டில் தான் த்ரிஷாவும் குடியிருக்கிறார், என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதற்கெல்லாம் அடுத்தபடியாக உச்சகட்டமாக, திரிஷா – விஜய் இருக்கும் வீடியோவே வெளியாகி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் விஜய் – திரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவா பறந்துள்ளார்கள், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது, நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் சென்றுள்ள நிலையில் தனி விமனத்தில் ஜோடியாக த்ரிஷாவை அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் இவர்கள் ஜோடியாக ரகசியமாக தனி விமானத்தில் அஜால் குஜாலா சென்றாலும் அது எப்படியோ வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் விஜய் – திரிஷா இருவரும் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனிதனியாக சென்று இருக்கலாம், எதற்காக ஜோடியாக தனி விமானத்தில் செல்ல வேண்டும் என பலரும் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் தற்பொழுது திரிஷா குறித்து விஜய் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு விஜய்யும், திரிஷாவும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது விஜயிடம் அனுஹாசன், ‘விஜய்க்கு பொருத்தமான ஜோடி யார் விஜய் – திரிஷா, விஜய் – ஜோதிகா, விஜய் – அசின்’ என்று விஜய்யிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், ‘எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பொருத்தமான ஜோடி திரிஷாதான் என்று.. அதையேத்தான் நானும் சொல்கிறேன். அதுமட்டுமின்றி திரிஷாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு வேறு என்ன சொல்லமுடியும்’ என விஜய் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here