தொடை நடுங்கி விஜய்… எதற்கு இந்த பயம் விஜய் உங்களுக்கு.?

0
Follow on Google News

தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் எம்ஜிஆர்- விஜயகாந்த்தை பின்பற்றி தான் அரசியலுக்கு வருகிறார்கள், ஆனால் எம்ஜிஆர் விஜயகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எந்த மரியான சேவைகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை ஒரு அரசியல் கட்சியாகவே வழிநடத்தி தன்னுடைய ரசிகர்களை அரசியலுக்கு தயார் செய்தார். அதேபோன்று எம்ஜிஆர் திமுகவில் ஒரு நடிகராக இணைந்து போது அண்ணாதுரை 1967 ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

அதன் பின்பு அண்ணாவின் அரவணைப்பில் அரசியலை கற்றுக் கொண்ட எம்ஜிஆர், அண்ணா மறைவுக்கு பின்பு திமுகவிலிருந்து விலகி தனி கட்சியை தொடங்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஆனால் விஜய் எந்த ஒரு அரசியல் தலைவரிடம் பயணிக்காமலே இரண்டு வருடங்களுக்கு பிறகு கட்சி ஆரம்பிக்கிறேன், தற்பொழுது கைவசம் இருக்கும் படத்தை முடித்து விடுகிறேன், கட்சி கொடியை அறிமுகம் செய்கிறேன், கட்சி பெயரை அறிமுகம் செய்கிறேன்.

ஆனால் கொள்கையை மெதுவாக சொல்கிறேன் என தயங்கி தயங்கி அரசியல் நகர்வுகளை நடத்தி வரும் விஜய் எப்படி எம்ஜிஆர் விஜயகாந்த் போன்று துணிந்து அரசியல் களத்தில் களமாடுவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. ஏனென்றால் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவருமே எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் பயணித்த காலத்திலேயே யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

குறிப்பாக விஜய் போன்று யாரிடமும் கைகட்டி நிற்காதவர்கள். ஆனால் விஜய் தன்னுடைய தலைவா படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் ஜெயலலிதாவிடம் கைகட்டி வீடியோ வெளியிட்டு உதவி கேட்டதை யாரும் மறந்து விட முடியாது. இதுபோன்று திமுக – அதிமுக இருவரிடமும் மாறி மாறி பயந்து கொண்டு புற வாசலில் உதவி கேட்டவர் விஜய் என்பது விஜய்யின் ஒவ்வொரு சினிமா படம் ரிலீஸ் ஆகும்போது அரங்கேறிய காட்சிகள் பலருக்கு நினைவிருக்கும்.

அந்த வகையில் அரசியலுக்கு துணிவு என்பது முக்கியம். அந்த துணிவு விஜய்க்கு இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.? அப்படி துணிவாக அதிரடியாக அரசியலில் இறங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருந்தால் ஒரு அதிரடியான ஒரு பேச்சை கொடுத்துவிட்டு கொடியையும் கட்சியை பெயரையும் அறிவித்திருப்பார்.

ஆனால் எங்கே தான் நடிக்கும் படத்திற்கு அரசியல் கட்சிகளால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்கின்ற அச்சத்தில் பயந்து பயந்து அரசியல் அடியை எடுத்து வைக்கும் விஜய் எப்படி அரசியல் களத்தில் மிகப்பெரிய ஆளுமையாய் இருக்கும் கட்சிகளை துணிந்து களமாட போகிறாரா என்கின்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுத்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.