நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் லியோ, மிக பெரிய பட்ஜெட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் இருந்து வருகிறது,
லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து வெங்கட்-பிரபு இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் காமியாகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் வெங்கட் பிரபு படத்திற்கான முக்கிய வேலையாக விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் லொகேஷன் தேர்வுக்காக தான் இவர்கள் சென்று உள்ளனர் என ஒரு தகவல் வெளியான நிலையில்.
லொகேஷன் தேர்வுக்காக குறிப்பாக விஜய் எப்போதும் செல்ல மாட்டார், ஆகையால் இது வேறு ஒரு காரணத்திற்காக தான் அமெரிக்காவிற்கு இவர்கள் சென்று இருக்க வேண்டும் என்பதால், அது குறித்த சில தகவல்களும் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கம் இருக்கும் விஜய் நடிக்கும் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான இரட்டை வேடப்படங்களில் ஒரே காட்சியில் அந்த இரட்டை வேடமும் இடம்பெறும் பொழுது, சம்பந்த பட்ட அந்த நடிகர் இரண்டு முறை அந்த இரட்டை வேடங்களில் நடித்து விட்டு பின்பு சில சிஜி ஒர்க் மூலம் அந்த காட்சிகள் வடிவமைக்கப்படும். மேலும் பெரும்பாலான இரட்டை வேடங்களில் நடிக்கும் நடிகர்களின் படத்தில் ஒரே காட்சியில் இரண்டு வேடங்களும் இடம்பெறுவது மிக குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாத் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார், ஆனால் அந்த படங்களில் பெரும்பாலான இடங்களில் இரட்டை வேடங்களும் ஒரே காட்சிகளில் இடம்பெறும் வகையில் மிக தத்துரூபமாக பல டெக்னாலஜிகளின் உதவியுடன் சங்கர் செய்திருப்பார். இந்நிலையில் தற்பொழுது டெக்னாலஜி வளர்ந்துள்ள சினிமாவில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் இரட்டை வேட காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பன கல்பத்தி அகோர ஆகியோர் சென்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விஜயின் முழு உடலையும் ஸ்கேன் செய்து, அதாவது ஒவ்வொரு கோணங்களில் விஜய் உடலை ஸ்கேன் செய்யப்பட்டு , அப்படி அமெரிக்காவில் உள்ள அந்த அதிநவீன டெக்னாலஜி மூலம் நடிகர் விஜய்யின் முழு உடல் ஸ்கேன் செய்யப்படும் பொழுது சிஜி டெக்னாலஜி பயன்படுத்தி அந்த இரட்டை வேடங்கள் காட்சியை வடிவமைக்கும் போது விஜய் எந்த கோணங்களில் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை அந்த டெக்னாலஜி மூலம் அதுவாகவே எடுத்து தேர்வு செய்து அதுவாகவே வடிவமைத்து விடும் என்று கூறப்படுகிறது.
அப்படி விஜயின் முழு உடலையும் அதி நவீன டெக்னாலஜி உதவியுடன் ஸ்கேன் செய்வதற்காகவே தான் விஜய் மற்றும் பட குழுவினர் அமெரிக்கா சென்று உள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்க இருக்கும் விஜய் நடிக்கும் படத்தில் இரட்டை வேடம் மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும், மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு டெக்னாலஜி யாரும் பயன்படுத்தாத வகையில் இது தான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.