நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பரவலாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முழுக்க முழுக்க சங்கீதாவின் அரவணைப்பில் குழந்தைகள் இருவரும் இருந்து வரும் நிலையில், விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படிப்புகளை முடித்துவிட்டு,
சினிமாவில் தன்னுடைய அம்மா சங்கீதா சிபாரிசில் லைக்கா நிறுவனத்தில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் அறிவித்து நீண்ட காலமாகியும் தொடங்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தில் யார் ஹீரோ என்கின்ற பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் மகன் சஞ்சய் நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிகர் அஜித்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதற்காக கதை சொல்வதற்காக தான் சஞ்சய், சுரேஷ் சந்திராவை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என்றும், நடிகர் விஜய் மகன் சஞ்சய் முதல் முதலாக இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நடிகர் அஜித்.
மேலும் எதிர்காலத்தில் அடுத்து சஞ்சய் இயக்கத்தில் ஒரு படம் கண்டிப்பா நடிப்பதாகவும் சஞ்சய்யிடம் அஜித் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆனாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது. இதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இன்னும் தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காத்திருந்து காத்திருந்து கடுப்பான சஞ்சய் என்னடா தன்னுடைய முதல் படமே இப்படி தாமதமாகிக் கொண்டிருக்கிறது என, என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்து வந்துள்ளார் சஞ்சய், தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் மகன் சஞ்சய் என்றாலும், அவருடைய தந்தையுடன் சில காலமாக சமூக உறவு சஞ்சய்க்கு இல்லை என்று கூறப்படுகிறது.
அதனால் விஜய்யிடம் எந்த உதவியும் சஞ்சய் கேட்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சஞ்சய், தான் கமிட்டான படம் இன்னும் தொடங்காமலே இருக்கிறது, இதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் மிகவும் தாமதம் செய்து வருகிறது என்று தன்னுடைய வருத்தத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
அப்போது சுரேஷ் சந்திரா அருகில் இருந்த அஜித் குமார் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார், அதற்கு சுரேஷ் சந்திரா தெரிவித்த உடனே போனை என்னிடம் கொடுங்க என்று, வாங்கி பேசிய அஜித், எதற்கும் நீ கவலைப்படாதே சஞ்சய், உன்னுடைய நம்பிக்கையை நீ விட்டு விடாதே, நான் உன் கூட இருக்கேன், என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என தெரிவித்த அஜித்.
தயாரிப்பு நிறுவனம் விரைவில் அந்தப் படத்தை தொடங்குவார்கள், அப்படி தாமதமானால் உனக்குத் தேவையான உதவிகளை நான் செய்கிறேன், தைரியமாக இரு என்று விஜய் மகன் சஞ்சய்க்கு நடிகர் அஜித் ஆறுதல் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய மகன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் கண்டுகொள்ள வில்லை என்றாலும் நான் இருக்கேன் என விஜய் மகனுக்கு உதவி செய்ய வந்த அஜித், உண்மையிலே கடவுளே அஜித் தான் என பலரும் தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.