விஜய் போட்ட ஆதிரடி ஆர்டர்… தயார் நிலையில் 700 கேமரா…15ஆயிரம் பேர்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

விழுப்புரத்தில் நான்கு மணிக்கு தொடங்கும் விஜய் முதல் மாநில மாநாடு இரவு ஒன்பது மணி வரை நடைபெற இருக்கிறது. சுமார் ஐந்து மணி நேரம் நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் தொடக்கம் முதல் முடிவு வரை என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்கின்ற ஒரு திட்டமிடலும் குறிப்பாக தொய்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக இருக்கின்றார்.

அந்த வகையில் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு என்பது நிறைய இருக்கிறது. அதில் தமிழர்களின் தொன்மை, வீரம், பழைமை, கலை, அறிவியல், முப்போகம் விளைந்த பூமி இப்படி தமிழர்களுடைய வரலாறு, திறமை, பழமை என அனைத்தையும் பறைசாற்றும் விதத்தில் அன்று இருந்த தமிழகம் இன்று எப்படி இருக்கிறது போன்ற பல ஏவி வீடியோக்கள் விஜய் நடத்தும் முதல் மாநாட்டில் மிகப் பிரம்மாண்டமான திரையில் திரையிடப்பட இருக்கிறது.

கடைசி ஒரு வாரமாக விழுப்புரத்தில் நடக்கும் விஜய் முதல் மாநில மாநாடு நடக்கும் இடத்தில், தினமும் குறைந்தது பத்தாயிரம் மக்கள் வந்து பார்வையிட்டு சென்று கொண்டிருக்கிற காட்சிகளும் அரங்கேறியிருக்கிறது, அதாவது ஒரு பொருள் காட்சி அல்லது ஒரு திருவிழாவுக்கு மக்கள் வருவது போன்று கூட்டம் கூட்டமாக அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இது மதுரையில் விஜயகாந்த் முதல் முதலில் கட்சி தொடங்குவதற்காக மாநாடு ஏற்பாடு நடைபெற்ற போது, மதுரை வாழ் மக்கள் அனைவரும் அந்த மாநாடு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இப்படி சார சாரையாக சென்று அந்த மாநாடு நடக்கும் இடத்தை வியந்து பார்த்து சென்ற வரலாறு உண்டு. இது மட்டும் இல்லாமல் அனைத்து மீடியாக்களும் விஜய் மாநாடு பந்தலில் தண்ணி தொட்டி இறங்கி விட்டது, மேடை தலைமைச் செயலகம் போல் அமைக்கப்பட்டுள்ளது.

பத்து நுழைவாயில்கள், விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்க சிறப்பு நுழைவாயில் இப்படி தொடர்ந்து இந்த மாநாடு காண எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் எகிற செய்து வருகிறது மீடியா. கடந்த சில தினங்களாக விஜய் மாநாடு பனி நடக்கும் இடத்தில் மழை பொய்த்து மாநாடு பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விஜய் நடத்தும் முதல் மாநாட்டில் 85 ஏக்கரில் பந்தல் மாதிரி போட்டு விடலாம் என்று ஒரு திட்டமும் இருக்கிறது,

காரணம் மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது மழை பெய்து விட்டால் மொத்தமும் முடிந்துவிடும் என்பதால் மக்கள் அமரும் இடங்களில் பந்தலை போடும் ஏற்பாடும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற 85 ஏக்கர்களில் உணவு வழங்குவதற்கு மற்றும் கார் பார்க்கிங் என மற்ற வசதிகளும் செய்து செய்யப்பட்டுள்ளது. இப்படி பல திட்டமிடலுடன் மிக தீவிரமாக் நடைபெற்று வருகிறது விஜய்யின் முதல் மாநில மாநாடு.

அதில் திட்டமாக சுமார் 700ccடிவி கேமராக்கள் மாநாடு பந்தலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. எங்கேயும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடந்து விடக்கூடாது என்பதற்காக தீவிரமாக கண்காணிக்க இந்த ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஒரு பதினைந்து ஆயிரம் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அதாவது மிழக வெற்றிக்கழக தொண்டர்களை 15 ஆயிரம் பேர் தேர்வு செய்து தனி யூனிபார்ம் வழங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் விஜய் முதல் மாநாடை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.