தமிழ் சினிமாவில் 80, 90களில் அறிமுகமாகும் நடிகர்கள் தங்கள் படத்தை ரஜினி ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, அவர்கள் நடிக்கும் படத்தில் அல்லது ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் சில காட்சிகளை இடம்பெற செய்வார்கள். அந்த வகையில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் அவர்களின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில், ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் காட்சிகள் அவர்கள் நடிக்கும் படத்தில் இடம்பெற செய்து ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெற்றனர்.
ஒரு காலகட்டத்திற்கு பின்பு தனக்கென தனி ரசிகர்களை பெற்று உச்ச நடிகராகவிஜய் உருவான பின்பு, ரஜினிகாந்தை தனது போட்டியாளராக கருதி அவருடன் போட்டி போட்டு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார் விஜய். அந்த வகையில் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் என்பதை விட ரஜினிகாந்த் சினிமாவில் இருக்கும் பொழுதே முதல் இடத்தை ரஜினியிடம் போட்டி போட்டு பிடித்து விட வேண்டும் என்பது விஜய்யின் பேராசையாக இருந்தது.
இதற்காக ரஜினியை பின்னுக்கு தள்ளி முன்னேறி விட வேண்டும் என்கின்ற பல முயற்சிகளை கடந்த காலங்களில் ஈடுபட்டவர் நடிகர் விஜய். அந்த வகையில் பாபா படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததும், அந்தத் தோல்வியை தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டி வைத்து கொண்டாடியவர் விஜய் என்கின்ற செய்தியும் பாபா படம் வெளியானபோது சினிமா வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய சச்சின் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மண்ணையும் கவ்வினார் விஜய். தற்பொழுது ரஜினிகாந்துக்கு போட்டியாக மற்றொரு செயலில் ஈடுபட்டுள்ளார் விஜய். இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதற்காக விமானத்தில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கபாலி பட போஸ்டரை இடம்பெறச் செய்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தானு.
இது கபாலி படத்துக்கு மிகப்பெரிய விளம்பரத்தையும் தேடி தந்தது, இதற்காக பெரிய தொகையையும் செலவு செய்தார் படத்தின் தயாரிப்பாளர் தானும். இது கபாலி படத்திற்கு கிடைத்த விளம்பரம் என்றாலும் கூட ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் பார்க்கப்பட்டது. தமிழ் சினிமா படங்களில் மிகப் பிரம்மாண்டமாக வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்ட படம் என்ற கபாலி சாதனையை முறியடிக்கும் வகையில் விஜய் களத்தில் இறங்கியுள்ளார்.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் விளம்பரம் வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் மிக தூரம் செல்லும் நான்கு ரயில்களில் விஜய் புகைப்படம் பொறித்த வாரிசு படத்தை விளம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் கபாலி படத்திற்கு செய்தது போன்று வாரிசு படத்திற்கும் விமானத்திலும் விஜய் புகைப்படம் பொறித்த விளம்பரம் இடம்பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இம்மாதம் நடைபெற இருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மட்டும் சுமார் ஐந்து கோடி வரை செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ரஜினி சாதனைகளை முறியடிக்கும் வகையில் பல முயற்சிகளை செய்து வருகிறார் விஜய் என கூறப்படுகிறது.