திரிஷா உடன் விஜய் அடிக்கும் லூட்டி… தயாராகும் விவாகரத்து நோட்டீஸ்… சங்கீதா எடுத்த முடிவு…

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அவருடைய மனைவியை சங்கீதாவை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வருவதாகவும், அதேபோன்று சங்கீதா அவருடைய கணவரை பிரிந்து லண்டனில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு காரணம் நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு ஏற்பட்ட நெருக்கம் தான் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விஜய் நடிக்கும் அனைத்து படங்களின் ப்ரோமோஷனிலும் கலந்து கொள்வார்.

அதேபோன்று சினிமா துறையைச் சேர்ந்தவர்களின் எந்த ஒரு திருமண நிகழ்வாக இருந்தாலும், நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவுடன் தான் ஜோடியாக சேர்ந்து கலந்து கொள்வார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் சங்கீதா கலந்து கொள்வதில்லை. அதே போன்று சினிமா துறையைச் சார்ந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் தனியாகத்தான் சென்று கலந்து கொள்கிறார்.

விஜய் திரிஷா இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் லியோ படத்திற்கு பின்பு மேலும் அதிகரித்ததை தொடர்ந்து, வெளிநாடுகளில் விஜயும் திரிஷாவும் தனியாக சுற்றி வரும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இவர்களுடைய நெருக்கம் குறித்து பல கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

இதில் உச்சகட்டமாக சமீபத்தில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜயும் திரிஷாவும் தனி விமானத்தில் ஜோடியாக சென்று கலந்து கொண்டது தான் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலையும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் விஜயின் மனைவி சங்கீதாவிற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் குரல் கொடுத்து எழுப்பி வருகிறார்கள்.

அதாவது கடந்த இரண்டு வருடங்களாக விஜயும் சங்கீதாவும் ஜோடியாக எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருக்கும் சூழலில், சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையில் என்ன ஆனது என்கின்ற குழப்பம் ஒரு பக்கம் நீடித்து வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திரிஷாவுடன் விஜய் ஜோடியாக சுற்றி வருவது நாளுக்கு நாள் எல்லை மீறி கொண்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திரிஷா விஜயின் ஜோடி எல்லை மீறி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கையில், உண்மையிலேயே விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அதை மற்ற சினிமா துறையினர் போன்று வெளிப்படையாக அறிவித்துவிட்டால் விஜய் எந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்தாலும் இது போன்ற ஒரு விமர்சனம் வராது.

இந்நிலையில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் விஜயை விவாகரத்து செய்வதற்காக ஒரு அதிரடி முடிவை எடுத்து சங்கீதா, அதை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு தயாராக இருந்ததாகும், ஆனால் விஜயின் சினிமா கேரியரும் அவருடைய அரசியல் எதிர்காலமும் பாதிப்பு உள்ளாகும் என்பதால் தான் இருவரும் ஒருமனதாக பேசி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் மத்தியில் கணவர் விஜய் இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆனால் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் என்பதற்காக தான் விஜய் மனைவி சங்கீதா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here