சுமார் 25 வருசத்துக்கு மேலாக இதோ அரசியலுக்கு வருகிறேன், நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு கொண்டே இருந்த ரஜினிகாந்த் இனி எங்க அரசியலுக்கு வர போகிறார் என அவரது ரசிகர்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கையில், நான் கட்சி தொடங்குவது உறுதி, எல்லாம் ரெடி, இன்னும் அம்பு விடுவது மட்டும் தான் என சும்ம கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போன்று சும்மா இருந்த ரசிகர்களை மீண்டும் உசுப்பேத்தி விட்டார் ரஜினி.
சுமார் இரண்டு வருடமாக இந்த வந்துட்டேன் வந்துட்டேன் என தண்ணி கட்டிவிட்டு, இறுதியில் எனக்கு உடல் சரியில்லை என காரணம் சொல்லி அரசியலுக்கு வரவில்லை என ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தார் ரஜினி, அனால் உடல் சரியில்லை என சொல்லிவிட்டு வயதான காலத்தில் வீட்டில் ஓய்வு எடுக்காமல், சினிமாவில் தமன்னாவுடன் ஆட்டம் போடும் ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி போன்று இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என ரசிகர்களை ஏமாற்றாமல், அதிரடியாக தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியலில் இறங்கியுள்ளார் விஜய். விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அவருக்கு அரசியல் தரப்பில் இருந்து முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலை என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் கூட ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஒரு முறை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம், விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள், அதற்கு வாழ்த்துக்கள் என்றும் மட்டும் சொல்லிவிட்டு அடுத்து எதுவுமே விஜய் அரசியல் குறித்து பேசாமல் கடந்து சென்று விட்டார் ரஜினி. அதாவது விஜய் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று என்று சொல்லிவிட்டால் சர்ச்சையாகி விடும் என்பதால் தான், வேண்டாம் வெறுப்பாக வாழ்த்துக்கள் என ஒரே வார்த்தையில் பேசிவிட்டு கடந்து சென்றுவிட்டார் ரஜினி.
இந்நிலையில் விஜய் சமீபத்தில் நடந்த மாணவர் , மாணவி சந்திப்பு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பாராட்டும் வகையில் அமைத்துள்ளது, குறிப்பாக விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுகளை மாணவர்கள் மத்தியில் இருந்து தொடங்கியுள்ளார் என்றும், மேலும் தற்பொழுது நடித்து வரும் கோட் படத்துடன் முழு நேர அரசியல் வாதியாக உருவெடுக்க உள்ள விஜய் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் விஜயை விட ரஜினிக்கு ரசிகர்களும் அதிகம், மக்கள் செல்வாக்கும் அதிகம், அந்த வகையில் தன்னால் அரசியலுக்கு வரவில்லையே என்கிற வருத்தம் ரஜினிக்கு இருந்தாலும் கூட, விஜய் அரசியல் என்ட்ரி, மற்றும் அவருடைய அரசியல் நகர்வுகள் ரஜினிக்கு பொறாமையை தந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் ரஜினிக்கு நெருக்கமாக இருக்க கூடிய பல பத்திரிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி.
சினிமா துறையில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்துருகிறார், நம்ம பையன், எப்படி அவருக்கு அரசியல் எதிர்காலம் உள்ளது என ரஜினி விசாரித்து வருவதின் பின்னணியில், விஜய் மீது அக்கரையில் ரஜினி விசாரிக்கவில்லை என்றும், எங்கே நம்மால் செய்ய முடியாததை விஜய் அரசியலில் செய்து சாதித்து விடுவாரோ என்கிற ஒரு பொறாமையில் தான் ரஜினி இப்படி விஜய் அரசியல் குறித்து கேட்டு தெரிந்து கொள்வதாக கூறப்படுகிறது.