தம்பி படிக்கிற வழியை பாருங்க…. இந்த வயசுல எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்..! விஜய் ரசிகரின் வேட்பு மனு நிராகரிப்பு..

0
Follow on Google News

தமிழ்நாட்டில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக , பாமக உட்பட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகின்றனர். ஆனால் திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

குறைந்த தொகுதிகள் மட்டுமே அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது, ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறைந்த தொகுதி கொடுத்தால் கூட சத்தமில்லாமல் வாங்கி கொண்டு கூட்டணியில் தொடர்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளது.

இந்த தேர்தலில் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தை சேர்ந்தவர்களும் சென்னை உட்பட பல மாவட்டக்களில் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில்,13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பதால் வயதின் காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிக்கத்தனர் இதனால் வேட்பாளர் ஏமாற்றம் அடைந்து சோகத்துடன் காட்சியளித்தார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு கூட தெரியாத விஜய் ரசிகர் படிக்கிற வயதில், பள்ளிக்கு போகாமல் எதற்கு இந்த விளையாட்டு என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் போங்க தம்பி படிக்கிற வழியை பாருங்க என்றும், பால்வாடி பசங்களுக்கு இது தேவையா என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடதக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..!