விஜயின் தில்லு முல்லு… லியோ வசூல் சாதனை என்று வெளிப்படுத்த நடத்த டுபாக்கூர் வேலை..

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. லியோ அப்டேட் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் ஹைப் கூடிக்கொண்டே வந்தது. மேலும் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், ஆரம்பத்தில் லியோ டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டியது.

ஆனால், முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்களால் லியோ படத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் லியோ வெளியானது முதல் இதுவரை உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலருக்குப் பிறகு இந்தாண்டு தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை கடந்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ. அதேபோல் கேரளாவில் 60 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம். ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் முதல் தமிழ்ப் படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் லலித் குமாரே கூறியிருந்தார்

இந்தப் படம் வெளியாகும்போது, திரையரங்குகளில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு தயாரிப்புத் தரப்பு பங்கு கேட்டதால், பல திரையரங்குகள் இப்படத்தை வெளியிட தயக்கம் காட்டின. பல திரையரங்குகள், அக்டோபர் 18ஆம் தேதிவரைகூட இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. முடிவில் தமிழ்நாட்டில் 850 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படம் வெளியான பிறகு, கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது.

இருந்தபோதும், படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், இந்தப் படத்தால் தங்களுக்கு லாபமில்லை என ஊடகங்களில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக புதிய படங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் மட்டுமே பங்களிப்புத் தரப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு 80 சதவீதம் பங்களிப்புச் செய்ததால், தயாரிப்பாளர்களுக்கு வசூல் அதிகமாக உள்ளது.

அதனால்தான் இப்படி கணக்கு காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் 500 கோடியை தாண்டி வசூல் செய்த படமாக ரஜினியின் 2.0, ஜெயிலர் மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் இருந்தது. இப்போது இந்த லிஸ்டில் விஜய்யின் லியோ படமும் இணைந்து இருக்கிறது. ஆனால் லியோ படத்திற்கு அதிக படுத்துக்களை தயாரிப்பாளர்களை வாங்கியதாகவும் கருத்துகள் பரவுகிறது.

அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிற்கு டிக்கெட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டது. அவ்வாறு விற்க சொல்லி மணிரத்தினம் கூறினாராம். அதனால் அந்த பாகம் வசூல் குறைவாக ஈட்டியதாகவும் தகவல்கள் பரவியுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயிலர் வசூலை தற்போது வரை லியோவால் முறியடிக்க முடியவில்லை. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறைய படங்கள் ரிலீஸாக இருக்கிறது.

இதனால் இப்போதே லியோ படம் பாதி திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறையும் என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த வசூல் குறைவுக்கு காரணம் படம் உருவாகும்போது எதிர்பார்ப்பை அதிகமாகியது தான். இந்நிலையில் லியோ வசூலை பார்த்துவிட்டு நம்பர் ஒன் இடம் எப்போதுமே ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தான் என ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரும் ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.