உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் கடந்த சில வருடங்களாக ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த், சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார், இந்நிலையில் தேமுதிக பொதுக்குழு கூடத்திற்கு காரில் அழைத்து வரப்பட்ட வீல் சேரில் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே என மனம் கேட்காமல் பொதுக்குழுவில் கலந்து கொண்ட பெண்களும் ஆண்களும் கலங்கிய காட்சிகள் மனதை உருக்கியது.
விஜயகாந்தின் உடல் துரும்பாய் இளைத்து போயிருக்கிறது. கை விரல்கள் எல்லாம் மெலிந்து வளைந்து காணப்பட்டது. விஜயகாந்தை தம்ஸ் அப் காட்ட கடுமையாக முயற்சித்தும் விஜயகாந்தால் கையை தூக்க முடியவில்லை.விஜயகாந்த் அருகில் அமர்ந்திருந்த பார்த்தசாரதி, நிர்வாகிகளை கைகாட்டி ஏதோ விஜயகாந்திடம் கூற, அதற்கு விஜயகாந்தால் எந்த ரியாக்ஷனையும் காட்ட முடியவில்லை.
கேப்டன் நல்லாயிருக்கிறார், அவருக்கும் ஒன்றுமில்லை என தொடர்ந்து பிரஸ்மீட்களில் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு முன்பு கூறி வந்த நிலையில் , பொதுக்குழு நடந்த மேடையின் இருக்கையில் விஜயகாந்தால் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உதவியாளர்கள் இருவர் அவருக்கு பின்னாலேயே நின்று இந்தப் பக்கம் ஒருவர், அந்தப்பக்கம் ஒருவர் என எங்கே சரிந்து விழுந்து விடுவாரோ என மிக பார்த்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் மேடையில் யார் என்ன பேசுகிறார்கள், என்பதையெல்லாம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டு கொள்ளவில்லை, அவர்கள் பார்வை விஜயகாந்த் மீது தான் இருந்தது, ஒரு கட்டத்தில் விஜயகாந்த் திடீரென நாற்காலியில் இருந்து சரிந்தார். அப்போது சுதாரித்து கொண்ட அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை பதறி பிடித்தனர். எங்களின் கேப்டனுக்கா இந்த நிலைமை, சிங்கம் போல் கர்ஜித்த விஜயகாந்தை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் கதறி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அழுதனர்.
இந்நிலையில் விஜயகாந்தை அவர்களுடைய கட்சி நிர்வாகிகளை தாண்டி, அதிகம் கொட்டப்பட்டுவது பொதுமக்கள் தான், இந்நிலையில் விஜயகாந்த் மேடையில் அமர முடியாமல் படாத பாடு பட்டு சரிந்து விழும் வீடியோ வீடியோவை பார்த்த மக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவரை ஏன் இப்படி கூட்டத்திற்கெல்லாம் அழைத்து வரவேண்டும்? அப்படி என்ன அவசரம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை நோக்கி கேள்விகளை கேட்டு வருகிறார்கள்,
மேலும் விஜய்காந்த் அவர்களுக்கு ,இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை
அவரை இப்படியெல்லாம் தயவு செய்து கஷ்ட்டப்படுத்தாதீர்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறோம்
அனைவர்க்கும் பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு என முக்கிய பிரபலங்களும் கண் கலங்கி கோரிக்கை வைத்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியலுக்காக ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத விஜயகாந்தை எதுக்காக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்து கொடுமைபடுத்தி சித்தரவதை செய்யுறீங்க? அவரை ஓய்வு எடுக்க வைக்க, என பாலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
விஜயகாந்த் கடந்த காலங்களில் பல பேட்டிகளில் என்னுடைய வெற்றிக்கு கரணம் என்னுடைய மனைவி தான், எனக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதொல்லம் உறுதுணையாக இருந்தவர் என்னுடைய மனைவி பிரேமலதா என தெரிவித்து இருந்தவர். அப்படி இருக்கையில் தற்பொழுது ஓய்வில் இருக்க வேண்டிய சூழலில் விஜயகாந்தை, அரசியலுக்கு தற்பொழுது அலைக்கழித்தாக பலரும் தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.