மனசாட்சியே இல்லாத வடிவேலு… மரணத்திற்கு முன்பு போண்டா மணி குடும்பத்திற்கு அள்ளி கொடுத்த விஜயகாந்த்…

0
Follow on Google News

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நுரையீரல் அலர்ஜியால் இன்று காலை உயிரிழந்தார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவரது உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அவரது உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது.

விஜயகாந்தின் இறப்பு குறித்து தகவல் அறிந்த திரையுலகினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சாலிகிராமத்துக்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மறைந்த காமெடி நடிகர் போண்டாமணியின் குடும்பத்திற்கு கூட விஜயகாந்த் மிகப் பெரிய உதவியைச் செய்துள்ளாரார் விஜயகாந்த், நடிகர் போண்டாமணி சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். அடிக்கடி டயாலிசிஸ் செய்து வந்த போண்டாமணி, ஒரு கட்டத்திற்கு மேல் காசு இல்லாமல் கடன் வாங்கியும், ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களிடம் உதவித் தொகை வாங்கியும் செலவழித்துள்ளார்.

இப்படி கடன்களை வாங்கி சிகிச்சை அளித்தும் அவரது உடல் நலனில் முன்னேற்றம் இல்லாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போண்டாமணி இறப்பு குறித்த தகவலை கேட்டதும் நடிகர் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்தது மட்டுமின்றி, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்த அவரது குடும்பத்திற்கு நிதியுதவி செய்தாராம்.

மேலும், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க அவரது கட்சிக்காரர்கள் வீட்டின் முன் திரண்டு சென்றிருந்தார்களாம். அப்போது போண்டா மணியும் , விஜயகாந்தை பார்க்க வேண்டும் என்று அவர்களுடன் சென்று இருந்தாராம்.போண்டாமணி வந்திருக்கும் செய்தியை உதவியாளர் கேப்டன் இடம் சொல்லி இருக்கிறார்.உடனடியாக போண்டாமணியை மட்டும் உள்ளே வரச் சொல்லி விஜயகாந்த் அழைத்து இருக்கிறார்.

உள்ளே சென்று விஜயகாந்தை சந்தித்து பேசிய போண்டாமணி, “உங்கள் கட்சிக்காரர்கள் நூற்றுக்கணக்கான பேர் உங்களைச் சந்திக்க திரண்டு இருக்கும்போது என்னை மட்டும் உள்ளே வர சொல்லி இருக்கீங்க” என்று கேட்டாராம். அதற்கு விஜயகாந்த், “அவர்களெல்லாம் கட்சிக்காரர்கள் என்னுடன் சமீபத்தில் இணைந்தவர்கள் தான். ஆனால் நாமெல்லாம் கலைஞர்கள் இல்லையா!! அதனால்தான் உன்னை முதலில் வர சொன்னேன் ” என தெரிவித்து ஐந்தாயிரம் ரூபாய் செக் கொடுத்து வழி அனுப்பி வைத்தாராம்.

விஜயகாந்தின் இந்த செயல் போண்டா மணியை மிகவும் நெகிழச் செய்துள்ளது. இத்தனைக்கும் நடிகர் போண்டாமணி விஜயகாந்தின் ப்ரொடக்ஷனில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதற்கே இவ்வளவு பெரிய உதவியைச் செய்து இருக்கிறார் விஜயகாந்த். ஆனால் நடிகர் வடிவேலுவுடன் போண்டா மணி ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் போண்டா மணி இறப்பிற்கு கூட வடிவேலு நேரில் வரவில்லை. மேலும் எந்த ஒரு இரங்கல் செய்தியும் தெரிவிக்கவில்லை. இப்படி பலருக்கு உதவி செய்த விஜயகாந்த் நம்மிடம் இல்லை என்கிற உங்களுடைய வேதனையை கமெண்ட் செய்யுங்கள்.