கணவர் உயிருடன் இருக்கும்போதே அவமானப்படுத்திய நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் மனைவி கொடுத்த பதிலடி…

0
Follow on Google News

நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்த போது அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்த அந்த நிமிடத்தில், தமிழக மக்கள் ஒன்றிணைந்து தமிழ் சினிமாவை அடக்கம் செய்து விட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு, சினிமா நடிகர் நடிகைகள் பின்னால் ஒரு மோகத்தில் ஓடிக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற அமைந்துவிட்டது விஜயகாந்தின் மரணம்.

அதாவது விஜயகாந்த் கடந்த 10 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலே இருந்ததால், தமிழக மக்கள் அவரை மறந்திருப்பார்கள், அதனால் விஜயகாந்தின் இறுதி சடங்கு என்பது மிக எளிமையாக நடந்து முடிந்திருக்கும் என நினைத்த சினிமா துறையை சார்ந்த நடிகர் நடிகைகளுக்கு இடியாய் விழுந்தது லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கூடியது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து, மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க விஜயகாந்துக்கு சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டம் கூட முறையாக ஒருங்கிணைக்காமல் ஏதோ கடமைக்கு செய்ய வேண்டும் என்று செய்தது நடிகர் சங்கம். அந்த வகையில் விஜயகாந்த் மரணம் அடைந்த பின்பு தான் விஜயகாந்தை இப்படி இழிவு படுத்துகிறதா நடிகர் சங்கம் என்றால்.? இல்லை.

அவர் உயிருடன் இருக்கும் பொழுதே விஜயகாந்தை அவமரியாதை செய்ததுதான் நடிகர் சங்கம் என்பது இங்கு பலருக்கு தெரியாது. கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை மீட்டு எடுத்துக் கொடுத்த விஜயகாந்த் என்பதை மறந்து, விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த புதிய நடிகர் சங்கம் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு விஜயகாந்தை நடிகர் சங்கம் அழைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அப்படி விஜயகாந்த்தை அழைத்து இருந்தால் நிச்சயம் விஜயகாந்த்க்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட, அவருடைய மனைவியோ, அவருடைய குடும்பத்தில் யாரோ ஒருவர் வந்திருப்பார்கள். ஆனால் ரஜினியையும் கமலையும் மட்டும் முன் நின்று இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்தது நடிகர் சங்கம். மேலும் விஜயகாந்த்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில் கூட நடிகர் சங்கத் தரப்பிலிருந்து நாசர் மட்டும் ஏதோ ஒரு கடமைக்கு சென்றார்.

ஆனால் முறையாகவே நடிகர் சங்கம் தான் விஜயகாந்த் பாராட்டு விழா நடத்தி இருக்க வேண்டும். அப்படி ஒன்றும் இவர்கள் செய்யவில்லை. அந்த வகையில் விஜயகாந்த் மறைந்த போதும், உயிருடன் இருந்த போதும் தொடர்ந்து விஜயகாந்த் செய்த நன்றியை மறந்து உதாசீனப்படுத்தி கொண்டு தான் இருக்கிறது நடிகர் சங்கம். இதெல்லாம் விஜயகாந்த் குடும்பத்திற்கு தெரியாதா.? என்ன.?

அதனால் தான் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் நாடகம் போடுவதை ஏற்றுக்கொள்ள நாங்கள் என்ன ஏமாளியா.? என்று சொல்வது போல் சரியான சவுக்கடி ஒன்றே விஜயகாந்த் மனைவி சமீபத்தில் பேசிய வீடியோ நடிகர் சங்கத்திற்கு உணர்த்தி இருக்கும். அந்த வீடியோவில் பேசியிருந்த பிரேமலதா, கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி, மேலும் கேப்டனின் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் எண்ணமும் அவரின் இடத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இப்போது கேப்டன் இல்லை என்றாலும் உதவி கேட்டு எங்கள் இல்லம் வரலாம், கண்டிப்பாக முடிந்த உதவியை செய்கிறோம் என்று பிரேமலதா பேசியுள்ளது, நீங்க என்ன கேப்டன் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவு செய்வது கேப்டன் இல்லை என்றாலும் எங்கள் இல்லம் தேடி வரலாம், நாங்க உங்களுக்கு உதவி செய்கிறோம் என பிரேமலதா பேசியுள்ளது விஜயகாந்த் மீது அக்கறை உள்ளது போன்று நாடகத்தை அரங்கேற்றும் நடிகர் சங்கத்துக்கு சவுக்கடி போன்று அமைத்துள்ளது என்கிறார்கள் மக்கள்.