தமிழ் சினிமாவே கடனில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில், கடனில் இருந்து மீட்டு, தமிழ் சினிமாவில் வளர்ச்சிக்கு சில விதிமுறைகளை செய்து தமிழ் சினிமா துறையை வாழ வைத்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்கள் சந்தோஷத்தில் கலந்து கொள்கிறாரோ இல்லையோ அவர்கள் துங்கத்தில் தவறாமல் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தவர் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருந்த சிவாஜி மறைவின் போது நடந்த இறுதி ஊர்வலத்தில் கட்டு கங்காத கூட்டம், இந்த கூட்டத்தில் எப்படி சிவாஜியை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்ய போகிறோம் என திகைத்து சிவாஜி குடும்பத்தினரும், ஒட்டு மொத்த திரையுலகமும் ஏன் போலீசாரும் திகைத்து நின்ற போது தனி ஒருவனாக கையில் ஒரே ஒரு துண்டை சுழற்றி அடித்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர் விஜயகாந்த்.
இப்படி திரையுலகை சேர்ந்தவர்களை தன்னுடைய குடும்பமாக பார்த்து, அவர்கள் துக்கம், சந்தோசம் என அனைத்திலும் முன்னிற்று நடத்திய விஜய்காந்த் மரணம் அடைந்து விட்டார் என்றதும், தமிழ் சினிமாவில் அவருடைய காலகட்டத்தில் முன்னனி நடிகராக இருந்த ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடியில் படப்பிடிப்பில் இருந்து கொண்ட ரஜினிகாந்த். விஜயகாந்த மரணம் செய்தி கேட்டு உடனே படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்தார். ஆனால் விஜயகாந்த் அடுத்த தலைமுறை நடிகரான, சூர்யா, கார்த்திக், சிம்பு, தனுஷ், விஷால், அஜித் என யாருமே விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த நேரில் வரவில்லை.
விஜயகாந்த் மரணம் அடைந்த அன்றே அடக்கம் செய்யாமல், அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் விதமாக மிக தாமதமாக அடுத்த நாள் தான் விஜயகாந்த் உடல் தகனம் செய்யப்பட்டது, ஆனால் இரண்டு நாட்கள் நேரம் இருந்து கூட பல முன்னனி நடிகர் வரவில்லை. குறிப்பாக நடிகர் விஜய்க்கு செந்தூரபாண்டி படத்தில் எப்படி விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்தாரோ, அதே போன்று நடிகர் சூர்யாவுக்கு பெரியண்ணா படத்தின் அவருடன் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நடிகராக சூர்யாவை கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த்.
ஆனால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதாக, அதுவும் ஒரு இடத்தில் நின்று கூட பேசி வீடியோ வெளியிடாமல், காரில் சென்று கொண்டிருக்கும் போதே பேசிய இரங்கல் வீடியோவை சூர்யா வெளியிட்டுள்ளது, மனிதநேயம் மிக்க மகத்தான கலைஞருக்கு… இப்படி காரில் சென்றவாறே அவசர அவசரமாக அஞ்சலி செலுத்துவது ஏன்? சூர்யா தங்கும் அறையில் ஓரிரு நிமிடம் பேசி வீடியோவை வெளியிட்டால் என்ன? அல்லது காரில் ஏறும் முன்போ, பின்போ கூட பேசலாமே? இது தான் சூர்யா விஜயகாந்துக்கு செய்யும் மரியாதையா என சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் ஷூட்டிங். அதனால் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை என ஹூரோக்கள் பலர் சொல்லி வருவது பெரும்பாலும் பொய்களே என கூறப்படுகிறது, சினிமா துரையை சேர்ந்த பெரும்பாலான நடிகர் நடிகைகள், வருகின்ற ஆங்கில புத்தாண்டை வெளிநாட்டில் குடியும் கும்மாளமுமாக கொண்டாடி முடித்த பிறகே இந்தியா வர திட்டமிட்டு இருந்துள்ளார்கள்.
இந்நிலையில் விஜயகாந்த்க்கு நினைவு செலுத்த நேரில் சென்றால், புத்தாண்டை வெளிநாட்டில் குடியும் கும்மாளமுமாக எப்படி கொண்டாடுவது என, குடியும் கும்மாளமும் தான் நமக்கு முக்கியம் என முடிவு செய்து விஜயகாந்த்க்கு இறுதி செலுத்த வராத சினிமா துறையினர்.டிசம்பர் 31தேதி இரவு முழுவதும் வெளிநாட்டில் நியூ இயர் பார்ட்டி கொண்டாடி விட்டு, தொடர்ந்து ஜனவரி 1 நியூ இயர் தொடர்ச்சி கொண்டாட்டம் முடித்து அடுத்த சில நாட்களில் சென்னை வர இருக்கும் இவர்கள்.கேப்டன் குடும்பத்தாரை சந்திப்பது. ‘மன்னிச்சிடுங்க. ஷூட்டிங்கை கேன்சல் பண்ண முடியல’ என சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கதை விடுவது, கேப்டன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்வது, மீடியா முன்பு வருந்துவது என அரங்கேறும் எதிர்பார்க்க படுகிறது.