நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.
இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.
இப்படி ஒரு நிலையில்கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் வீடு திரும்பிய இரண்டே நாளில் சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேடையில் விஜயகாந்த் அமர்ந்திருக்கும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
அதனைப் பார்த்து பலரும் மன கஷ்டம் அடைந்தனர். அதுமட்டுமின்றி அது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் கேப்டன் விஜய்காந்த்துக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி நடிகர் சாந்தனுவும் விஜயகாந்த் வீடியோவை ஷேர் செய்து இதயம் உடையும் எமோஜியை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மனம் நொந்து அவரின் நண்பர் நடிகர் ராதாரவி பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் ‘ அவனை ஏன் அவ்ளோ துன்புறுத்தனுமான்னு இருக்கு, சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் அவன். அவனை இப்படி பார்க்க முடியல,
இந்த நேரத்துல அவன தொந்தரவு பண்ண கூடாது. பாத்தா ரொம்ப கஷ்டம் ஆகிடும். அரசியலுக்கு நேர்மை உகந்த விஷயம் அல்ல, அதுக்கு உதாரணம் விஜயகாந்த் தான். அவன் அரசியலுக்கு வந்தே இருக்க கூடாது’ என்று உருக்கமுடன் பேசி உள்ளார். மேலும் பேசிய அவர், நாங்கள் மொத்தம் 5 பேர் நண்பர்கள்… விஜயகாந்த், எஸ்.எஸ்.சந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு. எங்கள் ஐந்து பேரில் விஜயகாந்த் தான் ஹீரோ.
விஜயகாந்த் சாப்பாடு எல்லாம் வாரி வாரி வழங்குபவர். ராவுத்தர் தான் விஜயகாந்தின் எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டார். எங்கள் குரூப் விஜயகாந்த் இடம் இருந்து திடீர் என பிரிந்து விட்டது. அது ஏன் என்று இன்னும் வரை எனக்கு தெரியவில்லை. என் நண்பனை எனக்கே அடையாளம் தெரியவில்லை, நேரில் சென்று பார்க்கலாம் என்றால் அவரது குடும்பத்தினர் அனுமதி மறுக்கிறார்கள்.
ஒருமுறை விஜயகாந்தை பார்க்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர்தான் மைத்துனர் சுதீஷ் விஜயகாந்த் பார்க்க வேண்டுமானால் அவரின் திருமண மண்டபத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டார். அது என் வேலையில்லை என்று கூறிவிட்டேன். விஜயகாந்த் அரசியலில் மிகவும் நேர்மையானவர். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்கு ஆகாது” என்று நடிகர் ராதா ரவி பேசியுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.