விஜயகாந்த் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்….கொடுத்த பணத்தை திருப்பி கொடு… விஜயகாந்த்க்கு நடந்த சோகம்…

0
Follow on Google News

ஆர். சுந்தர்ராஜன் அவர்களை ஒரு குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் தெரிந்த நம்மில் பலருக்கு அவரை ஒரு நல்ல இயக்குனராக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1982ம் ஆண்டு வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். முதல் படமே அமோகமான வெற்றியை பெற்றதால் அவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்தது.

வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி, குங்கும சிமிழ், சுகமான ராகங்கள், என் ஜீவன் பாடுது, மெல்ல திறந்தது கதவு என அடுத்தடுத்து படங்களை இயக்கியதில் பெரும்பாலானவை ஹிட் அடித்து திரை ரசிகர்களை திணறடித்தார். நக்கலும் நையாண்டியும் கலந்த அவருடைய தனித்துவமான ஸ்டைல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் இயக்குனராக இதுவரை 26 படங்களை இயக்கி இருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் பலருக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கின்னஸ் சாதனை படைத்த ‘சுயம்வரம்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் 14 பேரில் இவரும் ஒருவர். மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இவர் ராசியான இயக்குனர் என்றே சொல்லலாம். சுந்தரராஜனின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம். இப்படத்தின் ஹீரோவான நடிகர் விஜயகாந்துக்கும் மிக நல்ல பெயரை பெற்று கொடுத்த படமாக அமைந்தது.

சமீபத்தில் ஆர். சுந்தர்ராஜன் கலந்து கொண்ட நேர்காணலில் அவர் ஏ.வி.எம் நிறுவனம் கூட தன்னை நம்பவில்லை என மிகுந்த மனவருத்தத்துடன் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது, மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் தன்னிடம் ஒரு சொந்த வீடு கூட இல்லை என்ற மனக்கவலையில் இருந்தேன், தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் யார் எனக்கு ஒரு வீடு வாங்கி தருகிறார்களோ அவர்களுக்கு தான் அடுத்த படத்தை இயக்கி கொடுப்பதாக கூறி விட்டேன்.

இந்த தகவல் அறிந்த ஏ.வி.எம் நிறுவனம் எனக்கு அட்வான்ஸ் பணமாக 2 லட்சம் கொடுத்தனர். அதை எனது வீட்டுக்கு முன்பணமாக கொடுத்து விட்டேன். பின்னர் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் கதையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் சொன்னேன். அதில் விஜயகாந்தை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், அதை மறுத்த ஏ.வி.எம் நிறுவனம் நான் பாடும் பாடல் படத்தில் ஹீரோவாக நடித்த சிவகுமாரை தான் ஹீரோவாக போட வேண்டும் என என்னிடம் கூறிவிட்டனர். ஆனால் அதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஏ.வி.எம் நிறுவனம் அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டு விட்டனர். நான் அதனை ஏற்கனவே வீட்டிற்கு முன்பணமாக கொடுத்து விட்டேன்.

அதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. என்னைப் பார்த்து வருத்தப்பட்ட‌ கதாசிரியர் தூயவன் நடந்ததை பற்றி கேட்டறிந்து பஞ்சு அருணாச்சலத்திடம் என்னை அழைத்து சென்றார். அவரும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் கதையை கேட்டு அதற்கு ஒகே சொல்லிவிட்டார். அதற்கு அட்வான்ஸ் தொகையாக 2 லட்சம் கொடுத்தார். அதை ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தால் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் விஜயகாந்த் மற்றும் ரேவதி அவர்களுக்கு காதல் கை கூடாமல் போய்விடும். அந்த நடிப்பை இருவரும் உணர்ச்சிப் பூர்வமாக வெளிக்காட்டிருப்பார்கள்.

இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது மற்றும் விஜயகாந்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக மாறியது. இருப்பினும் இந்த படத்தை விஜயகாந்த் வைத்து எடுப்பதற்கு இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏ.வி.எம் நிறுவனம் தன்னை நம்பாமல் கைவிரித்தது குறித்து அந்த நேர்காணலில் மிகவும் வருத்தப்பட்டு பேசி இருந்தார் சுந்தர்ராஜன்.