விஜயகாந்த் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா.? பகீர் தகவலை வெளியிட்ட விஜய் தந்தை…

0
Follow on Google News

1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனவே வேறு மொழிகளில் 70 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் சுமார் 17 படங்களை விஜயகாந்த் வைத்து எடுத்துள்ளார்.

எண்பதுகளிலும் 90 களிலும் சந்திரசேகர்-விஜயகாந்த் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதனாலயே, இயக்குனர் சந்திரசேகரை எப்போதும் தனது குருவாக எண்ணி அவர் மீது தனி மரியாதை வைத்திருந்தார் கேப்டன். விஜயகாந்தின் மறைவின் போது துபாயில் இருந்த சந்திரசேகர் அங்கிருந்தபடியே இரங்கல் செய்தியை தெரிவித்து இருந்தார்.

தற்போது சென்னை திரும்பி உள்ள சந்திரசேகர், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், விஜயகாந்த் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் அதில்,எனக்கும் விஜயகாந்த்கும் ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் ஆன உறவையும் தாண்டி, அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தோம். இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி சொல்ல வேண்டுமானால் நான் அவரை ஒரு நண்பராக நேசித்திருக்கிறேன் ..

ஆனால் அவர் எப்போதும் குரு என்ற ஸ்தானத்திலேயே வைத்திருந்தார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் மட்டும்தான் அவர் எனக்கு நடிகனாக இருந்தார். நான் அவருக்கு இயக்குநராக இருந்தேன். நான் சரியான கோபக்காரன். என்னை மாதிரி கோபக்காரனிடம் அவர் 17 படங்களில் வேலை செய்திருக்கிறார் விஜயகாந்த். இதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு என்னை புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.

பொதுவாக ஹீரோக்கள் தான் படப்பிடிப்புக்கு தேதி கொடுப்பார்கள். ஆனால் என் படங்களில் கேப்டன் தேதி கொடுக்க மாட்டார் ..””நம்ம படம் எப்ப ஆரம்பிக்கிறது என்பதை நீங்களே சொல்லுங்க” என்று என்னிடம் தான் தேதி கேட்பார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத செய்தி கேட்டு, உடனடியாக அவரை வீட்டில் போய் சந்தித்தேன். அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. அப்படி இருந்தும் என்னை பார்த்ததும் எழுந்து கட்டி அணைக்க முயற்சி செய்தார். நான் அவரை விடவில்லை. குனிந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.

அவர் முதன் முதலில் கட்சி ஆரம்பிக்கும் போது, தமிழக அரசியலில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று கணக்குப் போட்டிருந்தேன். தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்த்து இருந்தேன். 2016 என நினைக்கிறேன். மிகப்பெரிய ஒரு அறுவை சிகிச்சை விஜயகாந்துக்கு முடிந்தது. அதற்குப் பின்னால் போஸ்ட் ஆபரேஷன் கேர் என்று ஒன்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு முறையான பராமரிப்பு இருந்ததா என்பது எனக்கு தெரியவில்லை.

ஏனெனில் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் தளர்ந்து போய்விட்டது .. கம்பீரமான தோற்றத்தை உடைய விஜயகாந்த் உடல் அவ்வளவு எளிதாக தளர்ந்து விடும் உடல் அல்ல அவரது உடல். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை வெளியில் சந்திக்க முடியவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களை அவர் சந்தித்து வந்திருந்தாலே அவர் இன்னும் பல காலம் வாழ்ந்து இருப்பார் என்று தோன்றுகிறது.

இன்னும் பத்து வருடத்திற்கு பின்னர் நடக்க வேண்டியது இவ்வளவு சீக்கிரமாக நடந்து விட்டது. அவரை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது .. அவருடன் ஆன பழைய நினைவுகள் எல்லாம் வந்து போகிறது .. என 2016ல் விஜகாந்துக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்பு தான் விஜயகாந்த் உடல் நிலை மோசமானதை சுட்டி காட்டி, அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் சந்தேகங்களை எழுப்பி உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.