நடிகர் மன்சூர் அலிகான் ஒரு குரூப் ஃபைட்டர் ஆக இருந்தபோது, அவரை கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். அதன்பின்பு மன்சூர் அலிகான் அடுத்தடுத்து பெரிய கதாபாத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து மிகப்பெரிய முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்தார்.
அந்த வகையில் பலரிடம் மன்சூர் அலிகான் தெனாவூட்டாக நடந்து கொண்டாலும், நடிகர் விஜயகாந்தை பார்த்த உடனே மிகவும் பவ்யமாக, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் நடந்து கொள்வார். இந்த நிலையில்ஒருமுறை சினிமா படப்பிடிப்பு ஒன்று கலந்து கொண்ட மன்சூர் அலிகான், திருவண்ணாமலையில் நடந்து கொண்ட படப்பிடிப்பு படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்கள் மீது உள்ள கோபத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வராமல் அடம்பிடித்து வந்துள்ளார். தொடர்ந்து அவருடைய நடிப்பில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் எடுப்பதற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மன்சூர் அலிகான் வராமல் அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்துள்ளார்.
பட குழுவில் இருந்து ஒவ்வொருவராக சென்று மன்சூர் அலிகானை படப்பிடிப்பிற்கு அழைக்கிறார்கள், மேலும் மன்சூர் அலிகான் நடிக்க வேண்டிய இந்த காட்சி படமாக்கப்பட்ட பின்பு தான் மற்ற காட்சிகள் படமாக்கப்படும் என்கின்ற ஒரு சூழல். இதனால் மன்சூர் அலிகானை தவிர்த்து விட்டு படப்பிடிப்பை தொடர முடியாத ஒரு சூழலுக்கு பட குழுவினர் தள்ளப்படுகிறார்கள்.
இதனை தொடர்ந்து மன்சூர் அலிகானிடம் ஒவ்வொருவராக சென்று எவ்வளவோ பேசி பார்க்கிறார்கள். நான் வரவே முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார். உடனே பட குழுவில் இருந்து நடிகர் விஜயகாந்துக்கு தகவல் போகிறது. விஷயம் அறிந்த விஜயகாந்த் உடனே அங்கிருப்பவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போனை கொண்டு சென்று மன்சூர் அலிகானிடம் கொடுங்கள் என்கிறார்.
இதனை தொடர்ந்து கேப்டன் பேசுகிறார் என்று மன்சூர் அலிகானிடம் போன் கொடுத்த உடனே, சொல்லுங்க கேப்டன் என மன்சூர் அலிகான் கேட்க, நீ சினிமாவில் இருக்க வேண்டுமா.? இல்லையா.? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், படப்பிடிப்பில் தகராறு செய்கிறாராயாமே.? என்ன உனக்கு படப்பிடிப்பில் பிரச்சனை என கேட்க.
ஐயோ… கேப்டன் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது, நான் சாப்பிட்ட சாப்பாடு எனக்கு சேரவில்லை. அதனால் வயிற்றில் கொஞ்சம் பிரச்சனை அதனால்தான் நான் படப்பிடிப்புக்கு போக முடியாமல், கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்கிறேன் என்று தெரிவித்து, உடனே நான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என கிளம்பி சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் மன்சூர் அலிகான்.
பின்பு பட குழுவினரிடம், இதுக்கலாமா நீங்க கேப்டனுக்கு ஃபோன் பண்ணுவீங்க என்று, அடுத்தடுத்து படப்பிடிப்பு நாட்களில் வாலை சுருட்டி கொண்டு இயக்குனர் சொல்வதைக் கேட்டு அந்த படத்தை மன்சூர் அலிகான் முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த்க்கு எதிர் கொஸ்ட்டியில் வேலை செய்து கொண்டிருக்கிறார் மன்சூர் அலிகான்.
அப்போது சில சலசலப்புகள் ஏற்படுகிறது. அதில் மன்சூர் அலிகான் ஓவர் அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் விஜயகாந்துக்கு சென்றதும், விஜயகாந்த் தன்னுடைய ஆட்களை அனுப்பி வைத்து. நான் அனுப்பி வைத்தேன் என்று மன்சூர் அலிகானிடன் பேசுங்கள் என்கிறார். ஆனால் விஜயகாந்த் அனுப்பிய ஆட்கள் விஜயகாந்த் அனுப்பிய தகவலை தெரிவிக்காமல் மன்சூர் வழியானிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
அவர்கள் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்படாமல் மன்சூர் அலிகான் மேலும் ஓவர் அட்ராசிட்டி செய்கிறார். இந்த தகவல் விஜயகாந்த் கவனத்திற்கு செல்கிறது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த விஜயகாந்த். சொன்னா கேட்க மாட்டியா.? நான் அனுப்பிவிட்டு ஆட்கள் வந்து உன்னிடம் பேசியும் நீ கேட்க மாட்டியா என விஜயகாந்த் கேட்க, அய்யோ கேப்டன் யாருமே நீங்கள் அனுப்பிய ஆள் என்று சொல்லவே இல்லை, என வாலை சுருட்டி கொண்டாராம் மன்சூர் அலிகான்.