வீட்டுக்கு யாராவது வந்தால்… விஜயகாந்த் பற்றி அவரது மனைவி சொன்ன உருக்கமான பதில்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரையும் தாண்டி தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், தொடர்ந்து பல வெற்றிப்படங்களளை வசூலில் சாதனையும் படைத்திருந்தார்.

நடிப்பு மட்டுமல்லாது தனது நல்ல குணத்திற்கும் பெயர் பெற்ற இவர், மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிப்பது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சினிமா அரசியல் என எதிலும் தலையிடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஆனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது ஆகும். இவர்களின் திருமணத்தைப் பற்றி பிரேமலதா தற்போது பேட்டி ஒன்றில் பேசியபோது, “என்னை பெண் பார்க்க வரும் போதுதான் நான் முதல் தடவை கேப்டனை பார்த்தேன். காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு கால்ல செருப்பு கூட இல்லாம இறங்கி வந்தாரு.

எங்கம்மா எல்லாருமே எவ்வளவு பெரிய ஹீரோ நம்ம வீட்டுக்கு வராரு. அவரை பயங்கரமா வரவேற்கணும் எதிர்பார்த்து நிக்கும் போது, அவர் இறங்கி வந்த விதம் இருக்கே. அவர் ஒரு ஹீரோ மாதிரியே இல்ல. 5 செகண்ட்ல அங்க இருந்த எல்லாருக்கும் அவரை பிடிச்சுட்டு. அப்போக் கூட அவரு நான் சபரிமலைக்கு மாலை போட்டுருக்கேன். இப்போ போய் பொண்ணு பாக்கலாமா கூட கேட்டுருக்காரு. அப்போ கேப்டனுக்கு தொடர்ந்து ஷூட்டிங் இருக்கும்.‌

எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மூணு நாள்தான் அவருக்கு ரெஸ்ட். எங்களோட ஹனிமூன் ஊட்டிதான். அதுக்கூட ஷூட்டிங்காக போனதுதான். கேப்டன் வெளியில ஒருமாதிரி வீட்டுல ஒருமாதிரி கிடையாது. அவருக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் எல்லாருக்கும் சாப்பாடு போடணும். ரொம்ப எளிமையா இருப்பாரு. எல்லார்கிட்டயும் அன்பா பழகுவாரு” என தெரிவித்த பிரேமலதா.

மேலும் அதோடு விஜயகாந்த் 1 வயதில் இருக்கும்போதே அவருடைய அம்மா இறந்து போய்விட்டார். அதற்கு பிறகு அவருடைய அப்பா தான் வளர்த்து வந்திருக்கிறார். அதனால் தான் விஜயகாந்த்க்கு லேட்டாக திருமணம் நடந்திருக்கிறது. இதனால் திருமணத்திற்கு பின் என்னை அவர் அம்மாவை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொண்டார். மேலும் விஜயகாந்த் ஊட்டி விட்டால் மிகவும் பிடிக்கும். எனவே இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து சாப்பாடு கொடுப்பேன்.

எத்தனை ஜென்மம் ஆனாலும் என் கணவர் விஜயகாந்த் தான் இருக்க வேண்டும்.” என தெரிவித்த பிரேமலதா,
அதுமட்டுமின்றி அவர்களது முதல் வருட திருமண நாளின் பொழுது விஜயகாந்த் பிரேமலதாவிற்கு போட்ட ஒரு செயினை கிஃப்ட்டாக கொடுத்துள்ளார். அதனைப் பற்றி பிரேமலதா பேசுகையில், “என்னிடம் பல நகைகள் இருக்கலாம். ஆனால் எனக்கு விஜயகாந்த் கொடுத்த முதல் கிப்ட் அந்த செயின் தான்.

அது எனக்கு மிகவும் பிடிக்கும். அது இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன். என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அவார்ட் அந்த செயின் தான்.” என்றும், மேலும் விஜயகாந்த் தனது கணவனாக வந்ததற்கு அந்த கடவுளுக்கு நன்றி என்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப் பணிகளையும் பிரேமலதா விஜயகாந்தே மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தத்தக்கது.