உடல்நிலை சரியில்லாமல் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் மரணம் அடைந்து நாட்கள் கடந்தாலும் இன்னும் சோகத்தில் இருந்தும் மக்கள் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு கேப்டனின் தம்பியான பால்ராஜ் என்பவர் விஜயகாந்த் குறித்து குறை கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இனையவாசிகள் பலரும் சொந்தக்காரவங்க என்றாலே இப்படித்தான், உயிருடன் இருக்கும் போது குறை சொல்வது, இறந்த பின்பு கண்ணீர் விடுவது என விமர்சித்து வருகின்றனர்.
கேப்டனின் தம்பி பால்ராஜ் அந்த பேட்டியில், “என் அப்பா அழகர்சாமிக்கு ஆண்டாள், ருக்மணி என்று இரண்டு மனைவி இருந்தார்கள்.முதல் மனைவிக்கு விஜயலட்சுமி, நாகராஜன், விஜயராஜ் என்கிற விஜயகாந்த், திருமலா தேவி என்று நான்கு பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு செல்வராஜ், பால்ராஜ் என்கிற நான், சித்ராதேவி, ராம்ராஜ், மீனா குமாரி, சாந்தி, பிரிதிவிராஜ் என்று ஏழு பிள்ளைகளும் பிறந்தோம்.
ஆண்டாள் அம்மா இறந்த பிறகு ருக்மணி அம்மாதான் எல்லாரையும் கவனித்துக் கொண்டார். அப்பா நடத்தி வந்த ரைஸ்மில்லில் தான் விஜயகாந்த் அண்ணன் எப்போதும் இருப்பார். அவர் என்னிடம் சரியா பேச மாட்டார் ஆனால் என்னை அடித்துக் கொண்டே இருப்பார். இதனாலே விஜயகாந்த் மீது எனக்கு பயம் இருந்து வந்தது. பின்னர் எல்லாரும் வளர்ந்த பிறகு, அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
விஜயகாந்த் சினிமா மீது இந்த ஆசையால் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். அப்பா இறந்த பிறகு என்னை ரைஸ் மில்லில் இருந்து துரத்தி விட்டாங்க. எலக்ட்ரிஷன் வேலை தெரிஞ்சதால் ஊர் ஊரா போயி வேலை செஞ்சு பிழைப்பை நடத்தினேன். அப்புறம் கொஞ்ச நாள் பிறகு உறவுக்கார பொண்ண கல்யாணம் முடிச்சேன். குழந்தை குடும்பம் ஆனதுக்கு அப்புறம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அதனால் எனக்கு பங்கு பிரித்துக் கொடுத்த வீட்டோட கீழ் பகுதியை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுட்டு மேலே இருக்கிற அறையில் குருவிக்கூடு போல குடும்பம் நடத்தி வந்தேன். என் மகனும் வளர்ந்து பெரியாளாகினான். அவனை கல்லூரியில் படிக்க வைக்க காசு தேவைப்பட்டது. அப்போது விஜயகாந்த்திடம் உதவி கேட்கலாம்னு அவரோட வீடு, ஆபீஸ்னு அவரை சந்திக்க அலைஞ்சேன்.
ஆனால் என்னால் கடைசி வரை சந்திக்க முடியவில்லை. சரின்னு போன் பண்ணாலும் கட் பண்ணி விடுவார். அவர் நல்லவரோ, கெட்டவரோ ஆனால் பிரேமலதா வந்து ஆளையே மாத்தி விட்டார். இப்ப கூட தன்னுடைய மனைவி மைத்துடன் பேச்சை கேட்டுக் கொண்டு தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார். எனக்கு மட்டும் இல்ல குடும்பத்தில் யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை” என்றெல்லாம் விஜயகாந்த் குறித்து அடுக்கடுக்காக குற்றம் சாட்டி இருந்தார்.
அதுமட்டுமில்லாமல், விஜயகாந்த் அவரோட மைத்துனனுக்காகவும் சகலைக்காகவும் தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்கிறார் என்றெல்லாம் பேப்பரில் வருகிறது அப்படி என்றால் அவரது சொந்த தம்பி தங்கைக்கும் உதவி செய்திருக்கலாமே.நாங்கள் அவரது உதவியை நாடி அவரைப் பார்ப்பதற்காக தேடி ஓடி ஓய்ந்து போய்விட்டோம். அதன் பிறகு எனக்குத் தெரிந்த நண்பர் தான் என்னை அதிமுக கட்சியில் சேர்த்து விட்டார்.
இனி சாகப் போற காலத்துல அவரே வந்து உதவி பண்ணாலும் எங்களுக்கு அந்த உதவி வேண்டாம்..என்று பால்ராஜ் கூறி இருந்தார். விஜயகாந்த்தை விட மிகவும் நேர்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் வடிவேலு. ஆனால் அவர் சினிமாவுக்கு போய் சம்பாதித்த பிறகு தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தனது உறவுக்காரர்களை சந்தித்து தேடி போய் உதவி செய்தார் அவர்தான் மனுஷன். என்று கேப்டனின் தம்பி பால்ராஜ் விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது அவரை குறை சொல்லி இருந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது…