விஜயகாந்த் நுரையீரலில் பிரச்சனை… மூச்சு கூட விட முடியலையே.. கடவுளே கேப்டனை காப்பாற்று..

0
Follow on Google News

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தேமுதிக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அச்செய்திகளுக்கு தேமுதிக கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம்.

அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இருப்பினும், அவரின் உடல்நலம் குறித்தும் அவருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சில தகவல்கள் பரவின. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் அவரால் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாத நிலைமைதான். ஆனால் இப்போது அது கூட இயலவில்லை. முதுகுத் தண்டு பிரச்சனை இன்னும் சீராகவில்லை. கழுத்தோடு இணையும் முதுகுத்தண்டு தேய்மானம் கண்டு விட்டதால் அவருக்கு ஞாபக சக்தியில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.

சுற்றியிருக்கும் உதவியாளர்கள், அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரைச் சென்று பார்க்க கடந்த ஒரு மாதமாகவே அனுமதி இல்லை. தவிர இப்போது நிலவுகிற காலநிலை காரணமாக, அவருக்கும் சரியானபடிக்கு மூச்சு விட முடியவில்லை. அவரது உடல் எடை கணிசமாக குறைந்த பிறகு அவருக்கு மூச்சு விடுவது நல்ல நிலைமைக்கு திரும்பியிருந்தது. ஆனால் தற்போது மூச்சுத் திணறல் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசத்திற்கான வழிமுறைகள் தொடர்கின்றன. தானாக சுவாசிக்கும் அளவுக்கு அவர் நுரையீரல் சக்தி பெற்ற பிறகு தான் செயற்கை சுவாசம் அகற்றப்படும் என கூறப்படுகிறது.

விஜயகாந்த்துக்கு சில வருடங்களுக்கு முன்பு சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னை இருந்தது. தற்போது அந்தப் பிரச்சனை எதுவும் இல்லை. செயற்கை சுவாசத்திலிருந்து விடுபட்டு மறுபடியும் விஜயகாந்தின் நிலைமை சீரடையும் என்று தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபடி இருக்கிறார்கள். இந்நிலையில் விரைவில் கேப்டன் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிராத்திப்போம்.