சிகிச்சை பெற்று வந்த நேரத்திலும்… ஜாலியாக இருக்க விஜயகாந்த் செய்த அதிரடி ஏற்பாடு…

0
Follow on Google News

நடிகரும் தேமுதிக நிறுவனரும் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் இறப்பு மொத்த தமிழகத்தையும் இருட்டில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் முதல் அரசின் மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் சினிமா துறையில் இருந்து அரசியல் துறை வரை அனைத்திலும் சாதித்தவர். இவை அனைத்தையும் விட அவர் சிறந்த விஷயம் என்றால், அவர் மக்களின் மனதை வென்றவர். எந்த ஒரு நபராலும் வெறுக்க முடியாத அளவுக்கு வாழ்ந்து காட்டிய விஜயகாந்த் இறப்பினை தொடர்ந்து பல்வேறு நபர்கள் விஜயகாந்த்துடன் இணைந்து பயணித்ததை பற்றி பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்டண்ட் கலைஞர் பெசன் ரவி தற்போது விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பெசன்ட் ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “கேப்டனின் இறப்பை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பலருக்கு நல்லது செய்த நபர் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருக்கலாம். அவர் செய்த உதவிகள் அவர் போட்ட சாப்பாடு விஷயங்கள் அனைத்தும் கண்ணுக்குள் நினைவுக்கு வருகிறது.

தங்கத்தை உருக்கினாலும் தங்கம் தங்கம் தான். அதேபோன்று தங்கம் மாதிரி மனம் படைத்த மனிதன் தான் விஜயகாந்த். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட மிகப் பெரிய ஒரு விஷயத்தை செய்தார். அது என்னவென்றால் அவருடன் படங்களில் நடித்து அவருக்கு பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஒன்றாக அழைத்து அவர்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தார்.

அப்படிதான் என்னையும் நேரில் அழைத்தார். அந்த நேரம் அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் அனைவருடனும் அமர்ந்து விஜயகாந்த் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அவர் கூட நடித்த மிகப்பெரிய நடிகர்கள் மட்டுமல்ல, சாதாரணமாக சண்டை போட்டவர்கள், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட அங்கு இருந்தார்கள். அனைவரிடமும் சரிசமமாக அமர்ந்த ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவருக்கு அனைவரையும் பார்க்க வேண்டும் என்று தான் தோன்றி இருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் விஜயகாந்த் சாப்பாடு போட்டார் என்று. அவர் போட்ட உணவை சாப்பிட்டு வளர்ந்தவனில் நானும் ஒருவன். என் வாழ்க்கையில் என்றுமே நான் கேப்டனை மறக்க மாட்டேன்” என்று பெசன்ட் ரவி கண் கலங்க உருக்கத்துடன் பேசியுள்ளார்.

விஜயகாந்த் இறப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு கூட நல்ல விஷயத்தை செய்திருந்தார் விஜயகாந்த், அதாவது கடந்த வாரம் போண்டா மணி இறந்த போது அவரின் குடும்பத்திற்கு விஜயகாந்த் நிதியை கொடுத்து உதவியிருந்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதன் இந்த பூமியை விட்டு சென்று விட்டார் என்று அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த்.

அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர். கட்சி தொடங்கி ஓராண்டிலேயே 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் 8.4% வாக்குகள் பெற்று 2009 மக்களவை தேர்தல்களில் 10.3% வாக்குகள் பெற்றிருந்தார். எந்த மேடை என்றாலும் துணிச்சலான பேச்சால் மக்களை கவர்ந்த விஜயகாந்த் அனைவரை விட்டு சென்றிருந்தாலும், கண்டிப்பாக சொக்க தங்கமாக அனைவரின் மனதிலும் எப்பவும் இருக்கத்தான் போகிறார்.