பல வருடங்களாக வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது நடிகர் சங்கம், 1985 முதல் 2000 வரை நடிகர் சங்க தலைவராக இருந்தவர் ராதாரவி, நடிகர் சங்கம் பக்கம் மறந்து கூட யாரும் அந்த காலகட்டத்தில் வர மாட்டார்கள் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு அனைவராலும் நடிகர் சங்கத்தை கைவிடப்பட்ட சூழலில் என்ன செய்வது என திகைத்து நின்ற அப்போதைய நடிகர் சங்க தலைவர் ராதாரவி நடிகர் சங்கத்துக்குள் விஜயகாந்தை அழைத்து வருகிறார்.
2000ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்தை அமர வைத்து முழு பொறுப்பையும் ஒப்படைக்கிறார் ராதாரவி. நடிகர் சங்கம் வங்கியில் வாங்கிய கடனை அடைந்து, கடனில்லா நடிகர் சங்கமாக தலைநிமிர செய்ய மலேசியா, சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த நடிகர் விஜயகாந்த். ஒவ்வொரு நடிகரையும் நேரில் சென்று அழைத்தார். ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று தரையில் அமர்ந்த விஜயகாந்த்.
நீங்கள் கலை நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்பு கொண்டால் தான். சோபாவில் அமர்வேன் என ரஜினிகாந்த் ஒப்புதல் பெற்றார் விஜயகாந்த். இப்படி விஜயகாந்த் எடுத்த பெரும் முயற்சியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி மூலம் பெற்ற வசூலில். நடிகர் சங்கம் வாங்கிய கடனை அடைத்தது மட்டுமில்லாமல். மேலும் நடிகர் சங்கம் பெயரில் வைப்பு தொகையும் சேர்ந்தது. பல வருடங்களாக, நடிகர் சங்கம் தலைவராக இருந்த நடிகர் சிவாஜி போன்ற நடிகர்கள் கூட செய்து முடிக்காததை விஜயகாந்த் செய்து முடித்து சாதனை செய்தார்.
நடிகர் சங்கம் எந்த ஒரு கடன் சுமை இல்லாமல் இயக்கி கொண்டிருக்கையில், புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த், 2006ம் ஆண்டு நடிகர் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்பொழுது புதியதாக நடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள், கடந்த காலங்களில் விஜயகாந்த் பட்ட கஷ்டங்களை அனைத்தையும் வீணடிப்பது போன்று செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த, நடிகர்கள் நாசர், விஷால், கார்த்திக் போன்றவர்கள், புதிய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக, நீதி திரட்டும் வேலைகளில் இறங்கினர், நட்சத்திர கலை நிகழ்ச்சி, நச்சத்திர கிரிக்கெட், என தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தில் வசூல் செய்ய தொடங்கினார்கள், ஆனால், கோடி கோடியா சம்பளம் வாங்கும் நீங்க கட்டிடம் கட்ட நாங்க பணம் தர வேண்டுமா.? என மக்கள் நடிகர் சங்கம் நடத்திய அணைத்து நிகழ்ச்சியையும் புறக்கணிக்க தொடங்கினார்கள்.
இதனை தொடர்ந்து மக்கள் விழித்து கொண்டார்கள், இனி மக்களிடம் ஏமாற்றி வசூல் செய்ய முடியாது என உனர்ந்த நாசர், விஷால், கார்த்திக் போன்ற நடிகர் சங்க முக்கிய தலைவர்கள், வங்கியில் கடன் வாங்கி நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 30 கோடி வரை வங்கியில் கடன் வாங்கி நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட இருக்கும் நடிகர்கள், கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரு நடிகர் தலா ஒரு கோடி கொடுத்தால் போதும் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்துவிடலாம்.
ஆனால் வங்கியில் வாங்கிய கடனை கட்டி நடிகர் சங்கத்தை மீட்க விஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீணடிப்பது போன்று மீண்டும் நடிகர் சங்கத்தை அடமானம் வைத்து பணம் வாங்கும் தற்போதை நடிகர் சங்க முக்கிய தலைவரின் முடிவுகள். அட பாவிகளா… விஜயகாந்த் பட்ட கஷ்டமெல்லாம் வீணடித்து விட்டிர்களே என சினிமா வட்டாரத்தில் சோகத்தில் புலம்பி தவித்து வருகின்றனர் சினிமா துறையினர்.