சினிமா பின்னணி இல்லாமல் வந்து கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என அஜித் ரசிகர்மன்றங்களை கலைத்தாலும் கூட, அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு. கோடிகளில் சம்பாதிக்கும் அஜித் பலருக்கு சத்தமில்லாமல் உதவி செய்து வருகின்றவர், மீடியாக்களை சந்திப்பது கிடையாது. இது போன்று எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் இருந்து வருகின்ற்றவர் அஜித்.
ஆனால் 10 வருடங்களுக்கும் முன்பு அஜித் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தான் வந்துள்ளார்.
திரைக்கலைஞர்களை கலைஞர் ஆட்சி காலத்தின் போது அவர்களுக்கு என்று நிலம் ஒதுக்கிய கலைஞர் கருணாந்தியை பெருமைப்படுத்த கடந்த 2010ல் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய அஜித்குமார், “60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே’ என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், ‘சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று பேசியிருந்தார்.
அப்போது அங்கிருந்த ரஜினிகாந்த் எழுந்து அஜீத் பேச்சுக்கு கைதட்டியது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கலைஞர், அஜித் மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் தனியாக தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து கருணாநிதி சந்தித்த நிகழ்ச்சி எல்லாம் நடந்து முடிந்தது. அதன் பிறகுதான் அஜித் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் இந்த தைரியமான பேச்சு இன்று வரை திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது. ஏனென்றால் இந்த அளவிற்கு அன்றைய முதல்வர் முன் தைரியமான பேச்சை வேறு எந்த நடிகரும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயகாந்த், அஜித் குமார் இடையே நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார் விஜயகாந்த். அப்போது நிதி திரட்டுவதற்காக ஒரு கலை நிகழ்ச்சிக்கு அனைத்து நடிகர்களும், நடிகைகளும் வர வேண்டும் என்று கூறியிருந்தாராம். ஆனால் விஜயகாந்த் அவ்வளவு கறாராக சொல்லியும் அஜித் குமார் மட்டும் வருவதற்கு ஒப்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
கடுப்பான விஜயகாந்த் நேரடியாக அஜித் வீட்டிற்கு சென்று, நீங்கள் கண்டிப்பாக வந்தாக வேண்டும் இல்லையெனில் நீங்கள் படம் நடிக்க முடியாது, உங்களுக்கு நடிகர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்காது, நல்லா யோசிச்சுக்கங்க என்றெல்லாம் விஜயகாந்த் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தான் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறாத அஜித், “தான் விழாவிற்கு வரவில்லை. உங்களால் என்ன செய்யமுடியுமா செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தவர்.
மேலும் நிதிக்காக தானே இந்த கலை நிகழ்ச்சி நடக்கிறது. எனவே நான் என் நிதி பணத்தை தருகிறேன்.” என்று தெரிவித்து விஜயகாந்தை ஆப் செய்துள்ளார் அஜித். இதனால் விஜயகாந்தால் எதுவும் செய்ய முடியாமல் போனது. எனவே கோபத்தை அடக்கி கொண்டு அஜித் கொடுத்த பணத்தை வாங்கி விட்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.