நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படியான நிலையில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனை உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
அதில் கடந்த சில நாட்களாக விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று நம்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட இந்த அறிக்கை, சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று சோசியல் மீடியாக்களில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூர்யா விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதனால் இணையவாசிகள் பலரும், விஜயகாந்தை கண்டும் காணாதது போல் இருக்கின்ற விஜய்யை வறுத்தெடுத்து வருகின்றனர்.
விஜயகாந்த் ஒரு நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் என்பதையும் தாண்டி மனிதநேயமிக்கவர் என்பது பலருக்கும் தெரியும். அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமல் என சினிமாவில் முன்னணி நடிகர்கள் கொடிகட்டி பறந்த போதிலும், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி கஷ்டப்பட்டு சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல்வேறு கலைஞர்களுக்கும் சாப்பாடு போட்டு உதவியும் செய்து இருக்கிறார்.
சினிமாவில் வளர்ந்த பிறகு, கஷ்டப்பட்டவர்களுக்கு ஓடோடி உதவியும் செய்து இருக்கிறார். அதனாலையே இன்றளவிலும் விஜயகாந்த் மீது பலரும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கின்றனர்.. அவ்வளவு ஏன், இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யாவிற்கு கூட விஜயகாந்த் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். 90களின் ஆரம்பத்தில் சினிமாவில் தடுமாறிக் கொண்டிருந்த விஜயை அன்று விஜயகாந்த் உடன் நடிக்க வைத்தால், விஜய் சீக்கிரம் பிரபலம் ஆகி விடுவார் என்று திட்டமிட்ட SAC, அந்த முடிவை விஜயகாந்திடம் சொல்லி இருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமலுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் நினைத்திருந்தால், முடியாது என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவரோ “தம்பி விஜய்க்காக இது கூட பண்ண மாட்டேனா” என்று சந்திரசேகரிடம் கூறி விஜய்க்காக. செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.
அதேபோல், நடிகர் சூர்யாவின் ஆரம்ப காலத்திலும் பெரியண்ணா படத்தில் நடித்துக் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இப்படி சினிமாவில் அன்று வளர்ந்து வந்த கலைஞர்களுக்கு ஓடோடி உதவி செய்த விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த சூர்யா, நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் ட்விட்டரில் அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நடிகர் விஜயோ, இதுவரை வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலரும், “விஜய் நன்றி மறந்து விட்டார் .. விஜய் சார் கொஞ்சம் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். இனிமேலாவது விஜய் வாயை திறப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.