இனி படத்தில் நடிக்க போவதில்லை… விஜய் எடுத்த அதிரடி முடிவு…

0
Follow on Google News

விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் அவர் அரசியலை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு. சமீபத்தில் விஜய் நடத்திய மாணவர்கள் சந்திப்புக்கான நிகழ்ச்சிக்காக லியோ படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு நாள் லியோ படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளாமல் முழுக்க முழுக்க மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார்.

நிகழ்ச்சி நடக்க இருக்கும் மண்டபத்திற்கு விஜய் நேரடியாக சென்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தவர், எந்த பக்கம் இருந்து மண்டபத்திற்கு உள்ளே மாணவர்களும் பெற்றோர்களும் வருவார்கள், எந்த வழியாக வெளியே செல்வார்கள். அவர்கள் அமர்ந்து சாப்பிடும் இடங்களில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா.? மொத்தம் ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் சாப்பிடலாம்.? இந்த நிகழ்வுக்கு வந்த அனைவரும் எத்தனை பந்தியில் சாப்பிட்டு முடிக்க முடியும். என விஜயை நேரடியாக சென்று ஒவ்வொன்றையும் கவனித்து அவரே முன்னின்று செய்துள்ளார்.

தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தாலும் கூட, இது அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்கின்ற ஒருவித பதட்டம் விஜய்க்கு இருந்துள்ளது. காரணம் தன்னுடைய அரசியல் குறித்து பேச இருக்கும் முதல் நிகழ்ச்சி இது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் மற்றும் மீடியாக்களும் மிக உன்னிப்பாக இந்த நிகழ்வை கவனிக்கின்றன.

அந்த வகையில் சின்ன குளறுபடி ஏற்பட்டாலோ அல்லது தவறுகள் நடந்தாலும் அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாகும் என்பதை நன்கு அறிந்த நடிகர் விஜய். இந்த நிகழ்வை அவரே முன்னின்று இரண்டு நாட்கள் லியோ படம் பிடிப்புக்கு லீவு விட்டு நடத்தியுள்ளார். குறிப்பாக மேடையில் மாணவர்களை விஜய் கௌரவிக்கும் போது மேடையில் பெற்றோர்,மாணவர், விஜய் தவிர்த்து வேறு யாரும் இருக்கக்கூடாது என விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம்

அந்த வகையில் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் செலவிட்டு விஜய் நேரடியாக திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்து காட்டியுள்ளார்.இதற்கு முக்கிய காரணம் அரசியலில் எக்காரணத்தை கொண்டு மூக்குடை பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக தன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார் விஜய். அந்த வகையில் தற்பொழுது விஜய் நடிக்க இருக்கும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தை முடித்துவிட்டு ஒட்டுமொத்த சினிமாவுக்குமே முழுக் போட இருக்கும் விஜய்.

அடுத்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல், தீவிர அரசியலில் விஜய் ஈடுபட ஈடுபட இருக்கிறாராம். தன்னுடைய அரசியலுக்கு வியூகங்கள் வகுப்பது, கட்டமைப்பை வலுவாக்குவது என சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு இரண்டு வருடங்கள் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்தாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், எம்ஜிஆரை பின்பற்றி தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் சார்ந்த படங்களில் விஜய் நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் , தன்னுடைய சினிமா மூலம் எம்ஜிஆர் எப்படி மக்கள் மத்தியில் தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டாரோ, அதேபோன்று விஜயும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பாடல் மற்றும் வசனங்கள் மூலம் தன்னுடைய அரசியலை முன்னெடுத்து செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவுமே தன்னுடைய அரசியலுக்கு அந்த படம் உதவும் வகையில் இருந்தால் மட்டுமே தேர்தல் நெருக்கும் நேரத்தில் தேவை பட்டால் மட்டுமே அரசியல் சார்ந்த படங்களில் நடிக்கலாம் என்றும், ஆனால் வெங்கட் பிரபு இயக்கம் படத்தை முடித்துவிட்டு அடுத்த இரண்டு வருடங்களுக்கு சினிமாவில் நடிப்பதில்லை என்பதில் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.