நடிகர் விஜய், அரசியலுக்கு வருகிறேன் என எப்போது அறிவித்தாரோ, அப்போதிருந்தே அவருக்கு பல பிரச்சினைகள் ஆரம்பமாகியது. அரசியலில் என்ட்ரி ஆனதும் எதிரிகள் அதிகமானதிலிருந்து அவரை பற்றிய பல விமர்சனங்களும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாகவே, த்ரிஷாவும், விஜய்யும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுப்புகள் தான் அதிக அளவில் வலம் வந்து கொண்டிருந்தது.
இது ஒருபுறம் இருக்க தற்போது, நடிகர் விஜய்க்கு அடுத்து மிகப்பெரிய பிரச்சனை ஒன்றும் வந்திருக்கிறது.
குறிப்பாக நடிகர் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் விவாகரத்து என அடிக்கடி வதந்தி பரவி வரும் நிலையில், தற்போது அந்த வதந்தியை உண்மையாக்கும் வகையில் விஜய்- சங்கீதா குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
நடிகர் விஜய் தற்போது தன் குடும்பத்துடன் ஒன்றாக இல்லை, அவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார் என்றும், அதனால்தான், அவரது மகன் புதிதாக இயக்கும் படத்திற்கு கூட நடிகர் விஜய் எந்தவித பிரமோஷனும் இன்றுவரை செய்யவில்லை, படத்தின் ஒரு சூட்டிங்கிற்கோ, அல்லது பட பூஜைக்கோ கூட விஜய் செல்லவில்லை, அவரின் மனைவி சங்கீதா தான் லைக்கா ப்ரொடக்ஷன் மூலம் படத்தை இயக்க ஒப்புதல் வாங்கி கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமே விஜய் அரசியலுக்கு வந்ததுதான்… அவரின் மனைவி சங்கீதா, விஜய் அரசியலுக்கு போகக்கூடாது என விடாப்பிடியாக இருக்கிறார். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்றால், தற்போது இருக்கும் சொத்துக்கள் முழுவதும் அழிந்துவிடும், அதோடு படத்திலேயே நடிக்காமல், விஜய் அரசியல் மட்டும் செய்தால் குடும்பமே நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என அவரின் மனைவி கராராக அரசியலுக்கு No சொல்லி இருக்கிறார்.
ஆனால் அவரின் பேச்சை மீறியும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அதிருப்தி அடைந்த சங்கீதா, விஜயின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி வைத்துக் கொண்டு, அரசியலுக்காக ஒத்த பைசா கூட இதிலிருந்து தரமாட்டேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் அவர், அரசியல் செலவுக்கு காசு வேண்டும் என்றால், நீங்கள் படம் நடித்து சம்பாதித்து, அதன் மூலம் வரும் பணத்தை வைத்து அரசியல் செய்து கொள்ளுங்கள் என ஒரே போடாக போட்டு இருக்கிறார் .
இதனால் செய்வதறியாது முழித்த நடிகர் விஜய், 2024-2026 வரை எந்த தேர்தல்களிலும் போட்டியிட மாட்டேன்,2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என அறிவித்ததற்கு காரணமே, இந்த 2 வருட கேப்பில், இரண்டு படங்களிலாவது நடித்து, அந்த பணத்தை வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என பிளான் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயின் மனைவி, மாமனார், மைத்துனர் என யார் சொல்லியும் கேட்காமல் இவர் அரசியலில் குதித்ததால், அனைவரும் இவர் மீது கடுப்பில் இருப்பதோடு, அதனால் தான் அவரது மனைவியும் சொத்துக்களை முடங்கி வைத்து அரசியலுக்காக ஒரு பைசா கூட தர மாட்டேன் என கரார் காட்டுகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.