ஆளும் தரப்பை வம்பிழுத்த விஜய்.. ஏற்கனவே கை கட்டியது மறந்து போச்சா விஜய் உங்களுக்கு.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் அரசியல் பஞ்ச், மேடைகளில் அரசியல் பேச்சின் காரணமாக ரஜினிகாந்த் இதோ அரசியல் வருகிறார் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றி நடிகர் விஜய் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாக்கியபின்பு ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வது, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து சொல்வது, தன்னுடைய படத்தின் அரசியல் வசனம் என்று தொடர்ந்து தனது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டு வருகிறார் விஜய்.

இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கருத்து தெரிவித்திருந்தாலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கக் கூடியவர், எந்த இடையூறு வந்தாலும் அதை எதிர்கொள்வாரே தவிர தன்னுடைய கருத்தை வாபஸ் வாங்க மாட்டார். ஆனால் விஜய் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப, தனக்கு சிக்கல் ஏற்பட்டதும், தனக்கு காரியம் ஆகவேண்டும் எனப்தற்காக, அந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருப்பவர் வீட்டின் கதவை தட்டுவதற்கு கொஞ்சமும் கூச்ச பட மாட்டார் விஜய்.

விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது, கைகட்டி அம்மா நீங்க தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிதாபத்துடன் வீடியோ வெளியிட்டு, தலைவா படத்தை திரைக்கு கொண்டு வந்தவர் விஜய்.

இதன் பின்பு சில காலம் அரசியல் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், எடப்பாடி முதல்வராக வந்த பின்பு மீண்டும் ஆளும் எடப்பாடி அரசுக்கு எதிராக அரசியல் பஞ்ச் பேச தொடங்கினார் விஜய். ஆனால் அவருடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது மரியாதை நிமித்தமாக எடப்பாடியை சந்திக்கிறேன் என்று அவருடைய படத்தில் இருந்த சிக்கலை தீர்த்துக் கொண்டார்.

விஜய் குறித்து ஒரு முறை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா பேசுகையில்,உங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் அமைச்சர் பெருமக்களை கொள்ளை புறமாக வந்து பார்த்த சரித்திரம் எங்களுக்கும் தெரியும் என்று பகிரங்கமாக பேசினார். இப்படி ஒவ்வொரு முறையும் உசுப்பேத்தி விடும் படி பேசிவிட்டு, சிக்கல் என்றதும் யார் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களிடம் சரண்டராகும் விஜய்.

சமீப காலமாக ஆளும் திமுக அரசை சீண்டி வருகிறார், ஆனாலும் ஆளும் திமுக அரசு விஜய்யை கண்டு கொள்ளவில்லை, லியோ ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விதிமுறையை முறையாக கடைபிடிக்க முடியாமல் ரத்து செய்துவிட்டு ஆளும் திமுக அரசு அனுமதி தரவில்லை என்கிற ஒரு தோற்றத்தை உருவாக்கி, விஜய் மீது ஆளும் தரப்புக்கு பயம் வந்துவிட்டது என விஜய் தரப்பி ஒரு பக்கம் கிளப்பி விட்டது.

இந்நிலையில் லியோ ஆடியோ வெளியிட்டு விழாவில் ஆளும் திமுக அரசை சீண்டும் வகை குட்டி கதை ஒன்று சொல்லியுள்ளார் விஜய், அதில், ”ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது.

அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! ” என்று நடிகர் விஜய் பேசிய போது, அரங்கிற்கு வெளியில் இருந்தவர்கள், அதாவது விஜய் அப்பா – மகன் என்று ஆளும் அரசாங்கத்தை குறித்து பேசியதாக விஜய்க்கு எதிராக குரல் எழுப்பியதால் அங்கே சலசலப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய் என்ன குட்டி கரணம் போட்டாலும், ஆளும் தரப்பு கொண்டு கொள்ளாமல் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து இது போன்று விஜய் சீண்டி வந்தால், பின்பு ஜெயலலிதாவிடம் கைகைட்டிய நிலைமை மீண்டும் விஜய்க்கு ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.