நடிகர் விஜய் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது கிடையாது என்கிற தகவல் அவ்வப்போது வெளியான நிலையில், நடிகர் நெப்போலியன் அவமானப்படும்படி விஜய் நடந்து கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது பலரை விஜய் மீது கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நெப்போலியன் சமீபத்தில் நடிகர் விஜயால் தனக்கு ஏற்பட்ட அவமரியாதை பற்றி பேசியுள்ளார்.
இதுபற்றி நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறியதாவது ‘போக்கிரி படத்தில் நான் பிரபுதேவா அதிகம் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவம். அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நடந்த சம்பவம் உண்மை தான். போக்கிரி படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் அவரும் நானும் ஒன்றாக நடித்தோம். ஷாட் முடிந்து வெளியே வரும் போது நடந்த சம்பவம் அது.
அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது. என் வாழ்க்கையில் அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. நடந்து கொண்டதில்லை. எந்த சூழ்நிலையில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. அப்போதிலிருந்து அவருடன் நான் பேசுவதும் இல்லை, அவரது படங்களை நான் பார்ப்பதும் இல்லை’ என நடிகர் நெப்போலியன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.
போக்கிரி படத்தின் பட பிடிப்பின் போது, வெளிநாடுகளில் உள்ள நெப்போலியன் நண்பர்கள் நெப்போலியனை சந்திக்க படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளனர், அப்போது அவர்கள் நடிகர் விஜயை சந்திக்க விரும்பியுள்ளனர். நெப்போலியன் அதுனால என்ன உடனே சந்தித்து விடுவோம், என அவர்களை அழைத்து சென்றுள்ளார். தான் ஒரு மூத்த நடிகர் என்பதால், மேலும் நடிகர் விஜய் உடன் இருக்கும் நட்பின் காரணமாக தனது நண்பர்களை விஜயை சந்திக்க அழைத்து சென்றுள்ளார் நெப்போலியன்.
படப்பிடிப்பு தளத்தில் கேரவன் உள்ளே இருந்த விஜயை சந்திக்க கேரவன் கதவை திறக்க நெப்போலியன் முயன்ற போது, அங்கே வெளியில் இருந்த காவலாளி நெப்போலியனை தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கு விஜயை பார்க்கணும் என நெப்போலியன் தெரிவிக்க முடியாது என காவலாளி மறுத்துள்ளார், இதனால் தனது நண்பர்களுடன் வந்த நெப்போலியனுக்கு பெருத்த அவமான ஏற்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து காவலாளிக்கும் நெப்போலியனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த இடத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரும் சுற்றி கூட்டமாக கூடியுள்ளனர். திடீரென கேரவன் கதவை திறந்து விஜய் வந்ததும் நெப்போலியனிடம் அவமரியாதையுடன் நடந்து கொண்ட காவலாளியை விஜய் கண்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோபத்துடன் நெப்போலியனை பார்த்து ஆங்கிலத்தில் உங்களுக்கு அறிவு இருக்கா.? என்று கேட்டவர், அவர் தான் என்னை பார்க்க முடியாது என சொல்கிறார், உங்களுக்கு புரியாதா.?
என்று விஜய் ஒரு மூத்த நடிகர் நெப்போலியனை பல பேர் மத்தியில் பேசியது, அங்கே நெப்போலியன் அழைத்து வந்த நண்பர்கள் மத்தியில் அவருக்கு பெருத்த அவமானத்தை பெற்று தந்துள்ளது. இதனை தொடர்ந்து உடன் வந்திருந்த அவர் நண்பர்கள், பரவாயில்லை மரியாதை தெரியாத இது போன்ற நடிகரை சந்திக்க வேண்டும் என்பது அவசியமில்லை என நெப்போலியனை அந்த இடத்தில் இருந்து அவரது நண்பர்கள் அழைத்து சென்றதாக கூறபடுகிறது.நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மதிக்கத்தக்க முக்கிய நடிகர்கள் இவர்களுக்கு இந்த நிலைமை என்றால், நடிகர் விஜய் உடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நிலைமை இதை விட மோசம் என்கிறது சினிமா வட்டாரம்..