நடிகர் ரஜினிகாந்திற்கு அவருடைய சூப்பர்ஸ்டார்” என்கிற பட்டத்திற்கு ஆபத்து வந்து ஆபத்து வந்து விட்டது என்பதை உணர்ந்து நான் இருக்கும் வரை அந்த பட்டத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைக்க எந்த எல்லைக்கு செல்வேன் என போராடி தக்க வைத்து வருகிறார் ரஜினிகாந்த் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய சினிமா பாதை தடம் மாறி சென்று கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
2014ல் ரஜினி நடித்த லிங்கா படம் வெளியாகும் வரை இருந்து ரஜினியின் சினிமா பாதை வேறு, அதன் பின்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது தொடங்கி அவருடைய சினிமா பாதை தடம் மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்து படங்கள் உணர்த்துகிறது. விஜய் நடித்த கத்தி போன்ற ஆக்சன் படங்கள் மூலம் விஜய் தனது சினிமா career ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்… விஜய்யின் துணிச்சலான நடிப்பை பார்த்து அங்கே தொடங்கியது ரஜினிக்கு ஒரு விதமான பயம்…
தனது சூப்பர்ஸ்டார் பட்டம் நழுவுவதை ரஜினிகாந்த் விரும்பவில்லை. தன்னை விஜய் எந்த வகையிலும் ஓவர் டேக் செய்து விடக்கூடாது என்பதற்காக ரஜினிகாந்த் கொடுக்கும் விலை, அவர் பின்பற்றிய அவருடைய கொள்கை, நம்பிக்கை, சமூகத்தின் மற்றும் நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இவையெல்லாம் உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய படத்தில் இயக்குனர் என்ன மோசமான கருத்தை வேண்டுமானாலும் என் படங்களில் மூலம் பரப்பிக்கொள்ளட்டும்.
ஆனால் அந்த படத்தில் மசாலா இருந்து வசூல் செய்து கொடுத்தால் போதுமானது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என ரஜினிகாந்த் அவரே வேட்டையன் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் மறைமுகமாக சொல்லிவிட்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ரஜினியை வைத்து தனது கருத்துகளை வேட்டையன் படத்தில் திணிக்க ரஜினி அனுமதித்துள்ளது, வேட்டையன் படம் பார்ப்பவர்களுக்கு ரஜினிகாந்த் படமாக இல்லை. படம் ஆரம்பத்திலேயே கல்வி தந்த மெக்காலே வாழ்க என நன்றி அறிவிப்புடன் ஆரம்பிப்பதே இதோ கம்பி கட்டுற கதை தான் வேட்டையன் என படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
வேட்டையன் படத்தில் அடுத்து வரிசையாக நீட் உருட்டுகள் தான். எந்த நீட் கோச்சிங் சென்டர் டா ஆன்லைன் கிளாஸ் நடத்துகிறார்கள், நீட்டால் நிறைய கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வியை பயில்கின்றனர். நீட் கோச்சிங் சென்டர் சென்று பயின்றால் மட்டுமே நீட்டில் வெற்றி பெற முடியாது. போன்ற அடிப்படை கூட தெரியாமல் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க எப்படி ஒப்பு கொண்டார்.
கோச்சிங் சென்டர் குறித்து பேசும் வேட்டையன் படம், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சீட்டிற்கு கொள்ளை அடிக்கும் கும்பலை உங்களால் காட்ட முடியுமா? நீட் இல்லாத போது செல்வந்த மாணவர்கள் பல கோடி ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை பெறுகின்றனர் , நீட் வந்த பிறகு இந்த சூழல் இல்லை , படிக்கும் திறன் திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற சூழல் நீட்டுக்கு பின்பு உருவாகியுள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் என்கிற ஒரு சூப்பர் ஸ்டார் அதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை தன் மூலம் மக்களிடம் திணிக்க எப்படி சம்மதித்தார் என்பதில் உறுதி படுத்தப்படுகிறது, ரஜினிகாந்த் தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைக்க கொள்கையை விட்டு கொடுக்க தயாராகிவிட்டார் என. ஆக மொத்தத்தில் வேட்டையன் படத்தில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் கஞ்சா அடிக்கின்றனர் என்று தொடங்கி நீட் ஒழிப்பு, ஒன்றிய அரசு என்று சொல்லி மத்திய அரசுக்கு எதிராக படத்தை எடுத்துள்ள இயக்குனர் ஞானவேல் ராஜ்.
இது தவிர தனது கம்யூனிச நக்சல் கருத்துகளை ரஜினிகாந்தை வைத்து அழகாய் திணித்துள்ளார். ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைக்க இது போன்ற படங்களில் நடித்து வருவது, அவர் விலை மதிப்பற்ற மக்கள் செல்வாக்கை நாளுக்கு நாள் இழந்து வருகிறார் என்கிற கருத்தும் நிலவி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.