அணில் போல் உதவிய விஜய்… கடைசி நேரத்தில் தப்பித்த நெல்சன்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டாக்டர், இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தனது மூன்றாவது படம் நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன் திலீப்குமார். இவர் பொதுவாக நகைச்சுவை உணர்வு கொண்டவர், சினிமா நிகழ்ச்சிகளில் பேசும் போது கூட இவரின் நகைச்சுவை கலந்த பேச்சினால் அரங்கமே குலுங்கி குலுங்கி சிரிக்கும் அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வுடையவர் நெல்சன்.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இது எப்படியும் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக தான் இருக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர், ஆனால் படத்தின் டைட்டில், பஸ்ட் லூக் வெளியான பின்பு தான் இது ஆக்சன் படம் என்று தெரியவந்தது. நகைச்சுவை உணர்வு கொண்ட நெல்சன் ஆக்சன் படம் கூட இயக்குவாரா.? படம் வெளியான பின்பு தான் தெரியும் என மக்கள் காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ் புத்தான்டுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படம் நடிகர் விஜய் கேரியரில் மிக மோசமான படமாக கருதப்பட்டு மண்ணை கவ்வியது. பொதுவாக விஜய் படம் நன்றாக இல்லை என்றால் கூட, அந்த படத்தில் உள்ள சில நல்ல காட்சிகளை குறிப்பிட்டு அந்த படத்துக்கு முட்டு கொடுக்கும் விஜய் ரசிகர்கள், பீஸ்ட் படத்தை பார்த்த பின்பு நெல்சன் மட்டும் கையில் கிடைத்தால் என விஜய் ரசிகர்களே கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பீஸ்ட் படம் படுதோல்விக்கு பின்பு ரஜினியின் புதிய படத்தில் இருந்து இயக்குனர் நெல்சன் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது, மேலும் ரஜினியும் வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கதையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து அந்த படத்தில் குளறுபடி செய்தது நடிகர் விஜய் தான் என்றும், இதனால் விஜய் நெல்சனை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஜினி படத்தில் இருந்து தன்னை வெளியேறினால், இத்துடன் தன்னுடைய சினிமா கேரியர் முடிவுக்கு வந்துவிடும் என நெல்சன் வருத்தப்பட, உடனே ரஜினி சாரிடம் நான் பேசுறேன் என விஜய் உடனே ரஜினியை தொடர்பு கொண்டு நெல்சன் விவகாரம் குறித்து பேசியுள்ளார். ஆரம்பத்தில் ரஜினி பார்க்கலாம் விஜய் என பிடிகொடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது, ஆனால் தொடர்ந்து பேசிய விஜய் ஒரு வழியாக ரஜினியை இயக்குனர் மாற்றும் முடிவை கைவிட வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் புதிய படத்தில் இருந்து நெல்சன் மாற்றப்பட்டு வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ராமருக்கு அணில் உதவியது போன்று, இயக்குனர் நெல்சனுக்கு விஜய் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெல்சன் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

ஆசை காட்டி மோசம் செய்த வெற்றிமாறன்… பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் சூரி..! என்ன நடந்தது தெரியுமா.?