தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய். இவரின் அரசியல் ஆர்வ மிகுதியால் சர்ச்சைக்குரிய வகையில் பேசி எதாவது சிக்கலில் சிக்கி விடுவார். மேலும் இவருக்கு கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளால் பெரு சிக்கலில் சிக்கிய சம்பவமும் அரங்கேறியது. அந்த வகையில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் விஜய் நடித்த சுறா திரைப்படம் படுதோல்வி அடைந்து மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தை குறைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தரவேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, இதனை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் அப்போதைய ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், அடுத்து விஜய் நடிப்பில் வெளியாக இருந்த காவலன் படத்துக்கு பலவேறு இடையூறுகளை சன் பிக்ச்சர் தரப்பில் இருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் காவலன் படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், அப்போதைய எதிர்கட்சியாக இருந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு சரண்டரானார் விஜய். இதனை தொடர்ந்து ஜெயலலிதா இந்த விவகாரத்தை கையில் எடுக்க சன் பிக்ச்சர் பின்வாங்கியதை தொடர்ந்து காவலன் படம் திரைக்கு வந்தது, இதன் பின்பு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் நடிகர் விஜய்.
இதன் பின்பு 2011 ம் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று முதல்வரானர் ஜெயலலிதா, அப்போது அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்த விஜய், 2013ம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் படத்தின் போஸ்டரில் வசனம் இடம்பெற்று இருந்தது, மேலும் சுறா படத்தில் கடும் நெருக்கடி கொடுத்த சன் டிவி நிறுவனத்துக்கு தலைவா படத்தின் சாட்லைட் விற்பனை செய்யப்பட்டது.
இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவை சந்திக்க விஜய் அவரது தந்தையுடன் செல்ல அனுமதிக்காமல் விரட்டியடிக்கப்பட்டனர், இதன் பின்பு கை கட்டி அம்மா நீங்க தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் வராத குறையாக விஜய் பேசிய வீடியோ ஓன்று வெளியான பின்பு தான் தலைவா படம் திரைக்கு வந்தது, இந்த சம்பவத்துக்கு பின்பு ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை வாலை சுருட்டிக்கொண்டார் விஜய்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, ஆடியோ நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது, படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அமைப்பது என தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக அரசை விமர்சனம் செய்து வந்த விஜய், மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு குறிப்பாக பாஜக பற்றி மூச்சு விடுவதில்லை. இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், விஜய் அரசியல் வருகை இனி திமுகவுக்கு எதிராக இருக்கும் என்பதற்காக , பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர் ஆடியோ நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆடியோ நிகழ்ச்சியில் குட்டி கதை சொல்லி, அரசியல் பேசி வந்த விஜய்யை அழைத்து படத்தின் விளம்பரத்துக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தி சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறது பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனம்.
அந்த நேர்காணலில் ட்ரைலர் ஓன்று தற்பொழுது வெளியாகியுள்ளது, அதில் இயக்குனர் ஒரு குட்டி கதை சொல்லுங்க சார் என்று கேட்கிறார், அதற்கு விஜய் இப்ப ஸ்டாக் இல்லையே என பதிலளிக்கிறார், இதை பார்க்கும் பார்வையாளர்கள், ஆடியோ நிகழ்ச்சி மேடையில் குட்டி கதை சொல்லி, அரசியல் பேசி வந்த விஜய் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதை சொல்ல ஸ்டாக் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயத்தில் இருப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் தயாரிப்பு நிறுவனம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் என்ன சொன்னாலும் செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது, இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய்க்கு எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லை என்றும், மேலும் பிரச்சனைகளை தனியாக எதிர்கொள்ள விஜய்க்கு தைரியம் இல்லை என்பதால், இனி வரும் காலங்களில் அரசியல் கருத்து தெரிவித்து தப்பி தவறி கூட எந்த ஒரு பிரச்சனையில் சிக்கி விட கூடாது என்பதிலும், மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கை கட்டி வீடியோ வெளியிட்டது போன்ற சம்பவம் மீண்டும் நடந்து விட கூடாது என்பதில் விஜய் மிக கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.