காருக்குள் நடந்த அந்த சம்பவம்… வாயே தீர்க்காமல் கப் சிப் ஆன விஜய்..! காருக்குள் நடந்தது என்ன .?

0
Follow on Google News

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அதிகம் சம்பளம் வாங்கும் முன்னனி நடிகர். ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் காதல் கதைகளில் நடித்து வந்த விஜய், அதன் பின்பு மெல்ல ஆக்சன் படங்களிலும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தவர், அவ்வப்போது அரசியலிலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்தார். ஆனால் துணிந்து நேரடியாக இதுவரையும் யாரையும் அரசியலில் எதிர்க்க திராணியற்றவர் என்ற விமர்சனம் இவர் மீது உண்டு.

அந்த வகையில் தலைவா படத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் போஸ்டரில் இடம் பெற்ற வசனத்தால், படமே வெளியாகாமல் முடங்கிய நிலையில், ஜெயலலிதாவிடம் சரண்டரான விஜய், ஒரு வழியாக படத்தை வெளியிட்டார். இதன் பின்பு அரசியலில் மூக்கை நுழைக்காமல் இருந்து வந்தவர், ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு மத்திய பாஜக, மற்றும் அப்போது ஆட்சியில் இருந்த மாநில அதிமுக அரசுகளை சீண்டும் வகையில் செயல்பட்டு வந்தார்.

சர்க்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சனம் செய்து வசனம் பேசியதை தொடர்ந்து, சர்க்கார் படம் ஓடிய திரையரங்குகளில் அவருடை பேனர் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டது. மேலும் மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்யும் விதத்தில் காட்சிகள் அமைத்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இதன் காரணமாக கிடைத்த விளம்பரத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்க இருந்த மெர்சல் கணிசமான வசூலை பெற்று தப்பித்து கொண்டது.

மேலும் திரைப்பட வசனம்,ஆடியோ வெளியிட்டு விழா, அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பு என இதன் மூலம் நீட், ஜி எஸ் டி என தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பின் பொது நெய்வேலியில் இருந்த போது வருமான வரித்துறை அதிகாரிகள் அவரின் வீட்டில் சோதனை நடத்தினர், மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யை சென்னைக்கு அவரது வீட்டிற்கு அழைத்தனர்.

அதற்கு விஜய் தனது சொந்த காரில் வருவதாக தெரிவிக்க, அனுமதிக்காமால் வருமான வரித்துறைக்கு சொந்தமான காரில் ஏற்றி அழைத்து வந்தனர். நெய்வேலியில் இருந்தும் சென்னை வரை காருக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் விஜய் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு அரசியல் பேசுவதை நிறுத்தி கொண்ட விஜய் இதன் பின்பு கப் சிப் ஆனார் குறிப்பாக மத்திய பாஜக அரசை பற்றி வாயே திறக்கவில்லை.

இந்நிலையில் காருக்குள் நடந்த இந்த சம்பவத்துக்கு பின்பு தான் விஜய் கப், சிப் ஆனதாக கூறப்படும் நிலையில், காருக்குள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் நடிகர் விஜய் இடையே என்ன நடந்தது என்பது மர்மமாக இது வரை நீடித்து வரும் நிலையில். விஜய் குறித்த ஏதாவது ஒரு விவகாரம் வருமான வரி துறையினரிடம் சிக்கி இருக்கும் அதை சுட்டி காட்டி எச்சரிக்கை விடுத்து சென்று இருப்பார்கள் வருவமான வரித்துறையினர் என்றும், அதனால் தான் விஜய் கப் சிப் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.