பிரசாந்தை பார்க்க ஆசையாக சென்று அவமானப்பட்ட விஜய்…

0
Follow on Google News

90களில் இரண்டே படங்களால் தமிழ் திரைஉலகத்தை உற்றுப் பார்க்க வைத்தவர் நடிகர் தான் பிரசாந்த் . இவர் என்னதான் டாப் இயக்குனர் தியாகராஜரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் தான் ரசிகர்களிடம் பிரபலமாக அறியப்பட்டார். தற்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜய்க்கு எல்லாம் ஒரு காலத்தில் பிரசாந்த் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு நட்சத்திரமாக ஜொலித்தவர் பிரசாந்த்.

பிரசாந்த் சினிமா பின்புலம் கொண்ட நடிகராக இருந்தாலும், அவர் எளிதாக சினிமாவில் வெற்றியை பெறவில்லை, ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க இவர் பெரிதும் போராடினார். பிரபுதேவா வரவுக்கு முன்னரே தமிழ் சினிமாவின் பெஸ்ட் டான்சர் பிரசாந்த் தான். இப்போது விஜய் எப்படி தன்னுடைய படங்களில் இருக்கும் பாடல்களில் எல்லாம் டான்சில் பிச்சு உதறுகிறாரோ, அதே போல் தான் பிரசாந்தும் தன்னுடைய படங்களில் இருக்கும் பாடல்களில் சிறப்பாக நடனமாடுவார்.

பிரசாந்த் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், விஜய் என்கிற ஒரு நடிகர் இருப்பது கூட பலருக்கு தெரியாது, பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமாகி பல எவர்க்ரீன் ஹிட் படங்களைக் கொடுத்து, பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடித்தது தொடங்கி, செம்பருத்தி, ஜோடி, ஜீன்ஸ், மஜ்னு, பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள் என பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். பல பெண்களின் சாக்லேட் பாயாகவும் இருந்தார்.

1990 ஆம் ஆண்டு பிரசாந்த் சினிமாவில் நுழைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் விஜய் சினிமாவிற்குள் வந்தார். இவர்கள் இருவருமே தந்தையை வைத்து சினிமாவிற்குள் வந்தவர்கள் தான். பிரசாந்த் டாப்பில் இருந்தாலும், சரி வர கதையை தேர்வு செய்யாமல் இன்று எங்கு போனார் என்றே தெரியாமல் போய்விட்டார்.

ஆனால் விஜய்யோ ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டுள்ளார். இருப்பினும் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த போது விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். இந்தச் சூழலில் பிரசாந்த் பட விழாவில் விஜய் அசிங்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

அந்தத் தகவலின்படி, பிரசாந்த் நடித்த அவரது முதல் படமான வைகாசி பொறந்தாச்சு படம் மெகா ப்ளாக் பஸ்டர் என்பது அனைவருமே அறிந்தது. அந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்ததாம். அப்போது சினிமாவுக்குள் நுழைந்திடாத விஜய் அந்த வெற்றி விழாவுக்கு சென்று பிரசாந்த்தை பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் விழாவுக்கு சென்ற அவரை உள்ளேயே யாரும் விடவில்லையாம்.

அப்போது நமக்கு தெரிந்த ஒருவர் சினிமாவில் வென்றுவிட்டார். நம்மை யாருமே மதிக்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் நடிகனாக வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளார். அதற்குப் பிறகு விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இடம் சென்று படம் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் ஆரம்ப கட்ட திரைப்படங்களை வடிவமைத்தவர். அதன்பிறகு விஜய்யின் சொந்த விருப்பமாக பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற வழிகாட்டினர்.

90 களின் பிற்பகுதியில் இருந்து 2000 களின் முற்பகுதி வரை விஜய் பெண்கள் மற்றும் குடும்ப ரசிர்களை பெருமளர் பெற்றார். விஜய் தனது வாழ்க்கையின் ஒரு கட்டம் வரை முதலில் இளைய தளபதி என்று அழைக்கப்பட்டார். கில்லிக்குப் பிறகு, விஜய் தொடர்ந்து வெளிவந்த பல சூப்பர்ஹிட்களுடன், அவர் இளையவை விட்டுவிட்டு தளபதி என்று மாறியது. இன்று விஜய் என்ற வார்த்தை தற்போது வெற்றியை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.