நடிகர் விஜய் பெயரை திட்டமிட்டு தவறாக சித்தரித்து சிலர் தங்கள் அரசியல் லாபத்துக்காக சமீப காலமாக பயன்படுத்தி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் வந்து விஜய் வாக்கு அளித்தது பெட்ரோல் விலையை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக தான் என்றும், மேலும் அவர் ஒட்டி வந்த சைக்கிள் நிறம் கருப்பு, சிவப்பு என்பதால் திமுகவுக்கு தான் வாக்களித்துள்ளார் என சிலர் திட்டமிட்டு நடிகர் விஜய்யை அவர்கள் நோக்கம் போல் சித்தரித்து வருகின்ற்றனர்.
அதே போன்று சமீபத்தில் வெளியான BEAST படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியை அடிப்படையாக வைத்து ஒரு சிலர் விஜய் காவியை கிழிக்கிறார், இந்து மதத்தை கிழிக்கிறார் என்று விஜய் பெயரை பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்ய தொடங்கினர். இது படிப்படியாக தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்திய பிரதமர் மோடி படத்தை விஜய் கத்தியை வைத்து கிழிப்பது போல் உள்ள படங்கள் அதிகம் பகிரப்பட்டது.
இது விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் உள்ள நபர்களால் பரப்பப்பட்டது என நடிகர் மற்றும் சினிமா விநியோகஸ்தர் ஜெயம் SK கோபி குற்றசாட்டு வைத்திருந்தார், மேலும் இந்த விஷயத்தை நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் கவனத்திற்க்கு ஜெயம் SK கோபி கொண்டு சென்று, சமுக வளைதளங்களில் விஜய் அவர்களை வைத்து நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஜெயம் SK கோபி.
இதை அறிந்து புஸ்லி ஆனந்த் மிகவும் வருத்தப்பட்டதாகவும் மேலும் இந்த சம்பவத்தை உடனே விஜய் கவனத்திற்க்கு கொண்டு சென்று, விஜய் ஒப்புதலுடன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறோம் என ஜெயம் SK கோபியிடம் உறுதியளித்துள்ளார் புஸ்லி ஆனந்த், அதனை தொடர்ந்து விஜய் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில்,பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.
இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும் நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடும் விதத்தில் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக அக்கறையுடன் பொறுப்புடன் செயல்பட்டு இதுமாதிரியான சம்பவங்களுக்கு உடனே அதற்க்கு முற்றுபுள்ளி வைத்த நடிகர் விஜய் அவர்களுக்கும் புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தனது கோரிக்கையை ஏற்று உடனே அறிக்கை வெளியிட்ட விஜய் தரப்பினர்க்கு நன்றி தெரிவித்துள்ள ஜெயம் SK கோபி, மேலும் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி விஜய் அவர்கள் ஒரு மாண்புள்ள அரசியல் தலைவராக உருவாகி வருகிறார் என்பதற்க்கு இதுவே சாட்சி, அவரின் கலைப்பயணம் மற்றும் அரசியல் பயணம் என அனைத்திலும் வெற்றி காண வாழ்த்துக்கள் என ஜெயம் SK கோபி தெரிவித்துள்ளார்.