நடிகர் விஜய் நடிக்கும் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் அதே தேதியில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளதால், தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகள் துணிவு படத்திற்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்திற்கு பெரும்பாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த திரையரங்குகளில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் தில்ராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிடையில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திக்க இருப்பதாகவும், வாரிசு படத்திற்கு துணிவு படம் போன்று சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என்றும் தில்ராஜ் பேசினார். இந்த நிலையில் வாரிசு – துணிவு பிரச்சனை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாடு விற்பனையில் வாரிசு படம் கொடி கட்டி பறந்து வருகிறது,ஐக்கிய நாடுகளில் மட்டும் சுமார் 192 திரையரங்குகள் இதுவரை வாரிசு படத்திற்கு புக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இது அடுத்தடுத்து 200 தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் படம் ஐக்கிய நாடுகளில் வெறும் 150 திரையரங்குகள் மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் சாதனையை வாரிசு படம் முறியடித்துள்ளது நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.