ஓப்பன் ஷோ பாக்கவே ஆள் இல்லை.. இதுல இவர் சூப்பர் ஸ்டாராம்.. கழுவி ஊத்தும் தியேட்டர் ஓனர்கள்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகிய வாரிசு படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. இந்த படம் ட்ரைலர் வெளியான போத, இது எங்கே வெற்றி அடைய போகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில். அவர்களுடைய கருத்துக்கள் உண்மையாகும் பட்சத்தில் தற்பொழுது வாரிசு படத்தின் ரிசல்ட் அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அஜித் மற்றும் விஜய் படங்கள் நேரடியாக மோதிய நிலையில், துணிவு படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வாரிசு படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் வாரிசு படத்தின் நிலைமை படு மோசமாக உள்ளது. பல நாடுகளில் வாரிசு படம் முதல் நாளே பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது.

சிங்கப்பூரில் வாரிசு படம் தமிழகத்தில் வெளியான பின்பு தான் வெளியானது. தமிழகத்தில் படம் முதல் காட்சி வெளியாகி படத்தின் ரிசல்ட் தெரிந்த பின்பு, தமிழகத்தில் அடுத்தடுத்த சோக்களின் டிக்கெட் விற்பனை மிக மந்தமாக திரையரங்குகளில் சொற்ப நபர்களே பார்க்கும் நிலைக்கு உள்ளானது வாரிசு படம். இதனால் முதல் காட்சியிலே வாரிசு படத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் படம் வெளியான பின்பு தான் சிங்கப்பூரிலும் படம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் படத்தைப் பார்த்தவர்கள் வாரிசு படத்திற்கு நெகட்டிவ் கமாண்ட் தெரிவித்து வந்த நிலையில், மேலும் வாரிசு படத்தின் ரிவ்யூ நெகட்டிவாக அமைந்த நிலையில், குறிப்பாக இது ஒரு மெகா சீரியல் போன்ற அமைந்துள்ளது என்று பரவலாக அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் ரிசல்ட் தெரிந்து கொண்டதால். வாரிசு படத்தின் ஓபனிங் ஷோவுக்கு அங்கே ஆட்கள் இல்லாமல், மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே திரையரங்கில் இருக்க பல காலி இருக்கையுடன், வாரிசு படம் திரையிடப்பட்டுள்ளது.இதனால் வாரிசு படத்தை வாங்கி வெளியிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் ஷோ குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிங்கப்பூர் திரையரங்கு ஓனர்கள், வாரிசு படத்தின் ஓப்பனிங் ஆளில்லை, இதில் இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று படத்தின் தயாரிப்பாளர் பில்டப் வேற கொடுத்து விட்டார் என்று படத்தை வாங்கி பார்க்க ஆள் இல்லாத விரக்தியில் கழுவி கழுவி ஊற்றி வருவதாக சிங்கப்பூர் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.