நடிகர் விஜய் – திரிஷா இவருடைய கிசு கிசு தான் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கிசு கிசு அதுவாக வருகிறதா.? அல்லது நடிகை திரிஷா பின்னிருந்து திட்டமிட்டு செயல்படுகிறாரா.? என்கிற சந்தேகம் வலுத்து வருகிறது, ஏனென்றால் ஒவ்வொரு முறையும் திரிஷா – விஜய் இருவரும் ரகசியமாக செல்லும் புகைப்படம் வீடியோ வைரலாகும் போது விஜய் – திரிஷா இருவரையும் இணைந்து வைத்து பரபரப்பாக பேசப்படும்.
அப்படி இந்து கிசு கிசுக்களுக்கு தீனி போடும் வகையில் விஜய் – திரிஷா இருவரும் லிப்டில் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டவர் திரிஷா, நைஜரிய நாட்டிற்கு திரிஷா – விஜய் சுற்றுலா சென்ற போது, அங்கே இருவரும் ஜோடியாக ரகசியமாக சுற்றிய புகைப்படம் எப்படி வெளியானது, ஒரு வேலை திரிஷாவே ஆள் வெச்சு எடுத்து வெளியிட்டு இருப்பாரோ இப்படி விஜய் உடன் தான் நெருக்கமாக இருப்பதை வெளி உலகுக்கு மெல்ல மெல்ல புரிய வைக்க தான் விஜய் சம்மதத்துடன் திரிஷா இப்படி செய்து வருகிறார் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் திரிஷா – விஜய் இருவருக்கும் இடையில் சில விஷயங்களை பேசி திரிஷா அம்மா சமாதானம் செய்துள்ள தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. கிள்ளி, திருப்பாச்சி, ஆதி என தொடர்ந்து விஜய் உடன் ஜோடி போட்டு திரிஷா நடித்து வந்த காலத்தில் இருவரையும் இணைந்து வைத்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. விஜய் நடித்த போக்கிரி படம் மிக பெரிய ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து அந்த படத்தின் சக்ஸஸ் மீட்டிற்கு திரிஷா தன்னையும் விஜய் அழைப்பார் என எதிர்பார்த்து இருந்துள்ளார். ஆனால் விஜய் அழைக்கவில்லை. இதனால் ரெம்பவே மனதளவில் கஷ்ட்டப்பட்டு, வீட்டில் விஜய் நம்மை அழைக்கவில்லையே என தேம்பி தேம்பி அழுதுள்ளார் திரிஷா என கூறப்படுகிறது. உடனே விஜய்க்கு போன் போட்ட திரிஷா அம்மா, வீட்டில் திரிஷா நீங்கள் போக்கிரி பட சக்ஸஸ் நிகழ்வுக்கு அழைக்கவில்லை என தேம்பி தேம்பி அழுவதை தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நீங்க திரிஷா கூட கடைசியாக நடித்த ஆதி படம் ஃப்ளாப் ஆனதுனால எங்களை ஓரங்கட்டுறீங்களா?’ என விஜய்யிடம் நேரடியாக கேட்டுள்ளார் திரிஷா அம்மா, அதற்கு விஜய் அய்யோ… அப்படியெல்லாம் இல்லை நாளைக்கு உடனே மீட் பண்ணலாம் என விஜய் தெறிவித்தவர். திரிஷாவை சமாதானம் செய்ய அடுத்த நாளே ஒரு நட்சத்திர ஓட்டலில் மத்திய சாப்பாடு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் விஜய்.
மேலும் அப்போது திரிஷா குறித்த ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனால் தான் உங்களை அழைத்தால் இது குறித்து உங்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்று தான் உங்களை அழைக்க வேயில்லை என தெரிவித்து திரிஷா மற்றும் அவருடைய அம்மாவை சமாதானம் செய்த விஜய், இதன் பின்பு குருவி படத்தில் தன்னுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
ஆனால் குருவி படத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடியாக நடிக்கும் போது, இருவரை பற்றி மிக பெரிய அளவில் கிசு கிசுக்கள் வந்ததை தொடர்ந்து, விஜய் – சங்கீதா இடையில் குடும்பத்திலும் பிரச்சனை உருவெடுத்து இருக்கிறது, இதனால் இதன் பின்பு திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட அதன் பின்பு விஜய் – திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.
இதன் சுமார் பின்பு 14 வருடத்திற்கு பின்பு லியோ படத்தில் இணைந்தது மீண்டும் விஜய் – திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததால் தான் சங்கீதா கடுமையான அப்செட்டில் இருந்துள்ளார். இதனால் விஜய் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் இடையில் பிரச்சனையாகி, விஜய் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.