விஜய் – திரிஷா ஒரே ரூமில்… கையும் களவுமாக மாட்டிய பரிதாபம்… வெளியான புகைப்படம்..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதெல்லாம் புதிதான விஷயம் இல்லை என்றாலும் நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதும் அதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகப்போவதாகவும் விஜய் அறிவித்ததுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ரீல் ஜோடிகளில் ஒன்று விஜய் – த்ரிஷா ஜோடி. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் படம் பார்ப்பவர்கள் உள்ளங்களையே கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். இதன் காரணமாகவே விஜய் – திரிஷா இருவரும் கில்லி, ஆதி, குருவி, என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தனர். அதேபோல் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, லியோ படத்திலும், பல வருடத்திற்கு பின்னர் த்ரிஷா – விஜய் ஜோடி ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்திலும் இவர்கள் கெமிஸ்ட்ரி அதிகம் கவனிக்கப்பட்டது. அதே போல் இப்படத்தில் இருவரும் லிப் லாக் காட்சியிலும் நடித்து அதிர்ச்சி கொடுத்தனர். லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் – திரிஷா உள்ளிட்ட பட குழுவினர் அனைவருமே, இரண்டு மாதம் காஸ்மீரில் தங்கி படப்பிடிப்பை நடத்தினர். அப்போது விஜயுடன் த்ரிஷாவுடனே வெளியிடங்களில் சுற்றுவது போல், எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவ, இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது.

அதே போல் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விலகி இருப்பதற்கு காரணமும் த்ரிஷா தான் என சில சினிமா விமர்சகர்கள் அரசால் புரசலாக கூறினர். ஆனால் இப்போது வரை, விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்குறித்த தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. இருவருமே திருமண நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்து கொள்வதை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக… மாடர்ன் உடையில் தளபதியுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார். இந்த பதிவில் கேப்ஷனாக… ‘புயலுக்கு அமைதி, புயல் அமைதிக்கு! இன்னும் பல மைல்கற்களுக்கு முன்னால்’ என பதிவிட்டுள்ளார்.

சிலர் அது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் சிலர் வெளிநாட்டு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னும் சிலரோ, விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ரூ.20 கோடிக்கு ஒரு அலுவலகத்தை வாங்கி உள்ளதாகவும், த்ரிஷாவும் அதே அப்பார்ட்மெண்ட்டில் ரூ.17 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கி உள்ளதாகவும் கூறினர். விஜய்யும் த்ரிஷாவும் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் லிஃப்டில் தான் அந்த போட்டோ எடுக்கப்பட்டதாகவும் கூறினர்.

தற்போது மேலும் அடுத்து 2வது படம் வைரலாகி வருகின்றன. ஒரு அறையில் ஒரே மெத்தையில் ராதிகா, த்ரிஷா, சங்கீதா, ராஷ்மிகா மந்தனா ஆகிய 4 பேரும் இருக்கின்றனர். அடுத்த போட்டோவில் அதே அட்மாஸ்பியரில் ராதிகாவும் விஜய்யும் இருக்கின்றனர். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இது வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு த்ரிஷாவும் சென்றிருந்தாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆம் எனில் த்ரிஷா ஏன் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் நடிகை ராதிகா எடுத்த அந்த இரண்டு புகைப்படமும் ஒரே அறையில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கிறது, அப்படியானால் விஜய் இருக்கும் அந்த ரூமில் தான் திரிஷாவும் இருந்தாரா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here