வாரிசுக்கு ஏற்பட்ட அதே கதி தான் லியோவுக்கு… எல்லா பக்கமும் செக்… பரிதாபத்தில் விஜய்…

0
Follow on Google News

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இதுவரை ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார்களை பரிசாக வழங்கினார். மேலும் சன் பிக்சர்ஸ் சார்பாக 100 குழந்தைகளின் இதய அறுவைசிகிச்சைக்காக ரூ.1 கோடி அப்போலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் அடுத்த பெரிய படமாக கருதப்படும் லியோ படம், ஜெயிலரின் வசூலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சூப்பர் ஸ்டார் சர்ச்சை வலுத்துள்ள நிலையில் லியோ படத்தின் வசூல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘லியோ’. 

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம், வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. 

இங்கிலாந்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த “வாரிசு”, திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை  படைத்துள்ளது.

இன்னிலையில் லியோ படத்தின் வசூல் இந்தியாவில் அடி வாங்கும் என்றும் பேசப்படுகிறது. ஏனெனில் பல பேன் இந்தியா படங்கள் அன்று ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் லியோ படம் வசூலில் அடி வாங்க போகிறது.  லியோ படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் பல படங்கள் ரிலீஸாக இருப்பதால், லியோ படத்திற்கு தமிழ்நாட்டில் முழுமையாக திரையரங்கு கிடைக்க வைய்ப்பு இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.

 இதற்கு முன்னர் துணிவு உடன் போட்டி போட்டு ரிலீஸ் ஆன வாரிசு படத்திற்க  குறைவான திரையரங்குகளை ஒதுக்கியது மிகப்பெரிய சர்ச்சையாக இந்த ஆண்டு ஆரம்பமே வெடித்தது. அதனால் அந்த படம் பலத்தை அடி வாங்கியது என்றும் பலர் கூறினர். தற்போது அதே நிலைமை லியோ படத்திற்கும் வந்துள்ளது.