விஜய்க்கு பின்னனியில் செயல்படும் தேசிய கட்சி.. துணிந்து இறங்கு விஜய்..

0
Follow on Google News

நடிகர் விஜய் சுற்றி தற்பொழுது அரசியல் புயல் மையம் கொண்டுள்ளதால், அவருடைய ஒவ்வொரு நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் மிக உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் சமீபகால அரசியல் நடவடிக்கைகளில் மூலம் மறைமுகமாக தன்னுடைய அரசியல் ஆட்டத்தின் அதிரடியாக இறங்கியுள்ள விஜய், விரைவில் அதை வெளிப்படையாக செய்யும் காலம் நெருங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இன்று தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர் விஜய்க்கு நீண்ட நாள் அரசியல் ஆசை உண்டு. இதற்கு முன்பு தன்னுடைய அரசியல் ஆசையை முன்னெடுத்து செல்லும் போதெல்லாம் சில சிக்கலை சந்தித்து பின்பு தற்காலிகமாக அரசியல் ஆசையை கைவிட்டுவிட்டு சினிமாவில் மட்டும் விஜய் கவனம் செலுத்தி வந்தாலும் கூட, அவருடைய அரசியல் ஆசை தொடர்ந்து விஜய் ஆழ்மனதில் இருந்து கொண்டே வந்துள்ளது.

இந்த நிலையில் விஜய் அரசியல் ஆசையை புரிந்து கொண்டு தேசிய கட்சி ஒன்று விஜய் பின்னணியில் இருந்து சமீப சில மாதங்களாகவே செயல்பட தொடங்கி விட்டதாகவே கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினியை பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப்பட்ட அதே தேசிய கட்சி தான் தற்பொழுது நடிகர் விஜய் பின்னால் இருந்து அவரை இயக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

2021 சட்டசபை தேர்தலில் ரஜினி மூலம் அரசியல் நகர்வுகளை நகர்த்திய அந்த தேசிய கட்சியின் வியூகம் தேர்தல் நெருங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ரஜினி தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்ததும் அந்த வியூகம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் மூலம் அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் நகர்வுகளை மிக சதுர்த்தியமாக அந்த தேசிய கட்சி நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக அந்த தேசிய கட்சியின் முக்கிய டெல்லி புள்ளிகளிடம் பலமுறை நடிகர் விஜய் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலில் விஜய் அரசியல் என்ட்ரி இருக்கும் என கூறப்பட்ட நிலையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி இருக்கலாம் என்கிற அளவுக்கு நடிகர் விஜயின் சமீப கால அரசியல் நகர்வுகள் விறுவிறுப்பாக நகர தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் நடிகர் விஜய் அரசியல் நகர்வுகளின் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாகவே எடுத்து வைத்து வருகிறார். இதற்கு முன்பு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு யாருமே நிலைத்து நிற்கவில்லை. விஜயகாந்த்க்கு மிகப் பெரிய அளவில் அரசியலில் வரவேற்பும் செல்வாக்கும் இருந்திருந்தாலும் கூட. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்பொழுது அரசியலில் இருந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதே போன்று நடிகர் சரத்குமார், டி ராஜேந்திரன், பாக்யராஜ் போன்ற பல நடிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை பரபரப்பாக அறிவித்துவிட்டு பின்பு அதிலிருந்து பின்வாங்கியதால் அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆனது போன்ற பல விஷயங்களை நன்கு உணர்ந்த நடிகர் விஜய் மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுடன் தான் தன்னுடைய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..