விஜய்க்கு அரசியல் ஆலோசகரான முக்கிய புள்ளி… பின்னனியில் இயங்கும் டெல்லி தலைமை..

0
Follow on Google News

சமீப காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் சைலன்டாக இருந்தாலும். சற்று அதிரடியாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்காக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் நடிகர் விஜய் பிடிவாதமாக எந்த ஒரு காரணத்திற்காகவும் உதயநிதியின் ரெட் ஜீன்ஸ் மூவிஸ் தன்னுடைய படத்தை தரக்கூடாது என தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்டு விட்டார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் இருவருக்கும் இடையிலான உரசல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளும் அரசை எதிர்த்து துணிந்து விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுகளை நடத்துவதின் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பு சில காலம் அரசியல் கருத்துக்கள் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்த நடிகர் விஜய்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல இலக்கியவாதியும், அரசியல் வாதியுமான பல.கருப்பையாவை நேரில் சந்தித்து சுமார் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார். அப்போது தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ள விஜய், அடுத்தடுத்து தன்னுடைய அரசியல் நகர்வுகள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என பல.கருப்பையாவிடம் ஆலோசனை கேட்டவர், அதன் பின்பு தன்னுடைய அரசியல் நகர்வுகளை பல.கருப்பையா ஆலோசனை படி நகர்த்தி வருகிறார் விஜய்.

அப்படி பல.கருப்பையா ஆலோசனைகளில் ஓன்று தான் அம்பேத்கார் பிறந்த தினத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கார் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செய்ய சென்றது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்துக்கு அரசியல் ஆலோசகராக எப்படி தமிழருவி மணியன் இருந்து செயல்பட்டாரோ அதே போன்று தற்பொழுது நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக பல.கருப்பையா செய்யப்பட்டு வருவதாக கூறப்டுகிறது.

பொதுவாகவே பல.கருப்பையா பல மேடைகளில் திமுக, அதிமுக என இரண்டு திராவிட காட்சிகளையும் எதிர்த்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து வந்தவர். அந்த வகையில் விஜய்யின் சமீப கால அரசியல் நகர்வுகள் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்க வேண்டும், மேலும் அட்ரஸ் இல்லாமல் போன அதிமுகவை கண்டுகொள்ள தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ள விஜய், ஆளும் திமுக அரசுக்கு எதிராக தன்னுடைய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து செல்கிறார்.

மேலும் நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசைகள் இருந்தாலும் கூட வரும் 2026 சட்டசபை தேர்தலில் தனி கட்சி தொடங்கி அரசியல் களத்தில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருந்தி அரசியலை சந்தித்தால், இதற்கு மும்பு ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்டது போன்ற ஒரு நிகழ்வு தான் தனக்கும் ஏற்படும், மேலும் விஜயகாந்த போன்று தனக்கான 5 அல்லது 10 சதவிகித வாக்குகள் இருப்பதை மட்டுமே வெளிக்கொண்டு வரமுடியும், மற்றபடி அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துள்ளார் விஜய்.

இந்நிலையில் 1996 சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ் எப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்ததோ அதே போன்று, வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக விஜய் வாய்ஸ் கொடுப்பார் என்றும், அதற்காக பாஜகவுடன் விஜய் கைகோர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பாஜக மற்றும் விஜய் இரண்டு தரப்பிற்கு இடையில் சுமுகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலுக்காக ரஜினியை பின்னின்று பாஜக செயல்பட்டு, அந்த ஆப்பரேஷன் தோல்வியை சந்தித்தது, ஆனால் 2026 தேர்தலுக்காக விஜய்யை வைத்து பாஜக தொடங்கியுள்ள இந்த ஆப்பிரஷன் வெற்றியை பெரும் என நம்பிக்கையில் டெல்லி பாஜக விஜய் மூலம் காய்களை நகர்த்தி வருவதாகவும், அந்த வகையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன் விஜய் 2026 சட்டசபை தேர்தலில் கை கோர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்.